உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் – ஆழ்வார் திருநகரி
272 Views
![]()
புதிய தமிழகம் கட்சி யின் சார்பில் இன்று (14.08.2021) ஆழ்வார் திருநகரியில் அரசாங்க நகரில் வைத்து, ஆழ்வை ஒன்றியம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், திருச்செந்தூர் ஒன்றியம் உள்ளிட்ட பகுதியில் பேரூராட்சி மற்றும் நகராட்சி க்கு நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் . குறித்து ஆலோசனைக்கூட்டம் மற்றும் செப்டம்பர் 11-ல் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் வீர வணக்கநாளில் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் அதிகப்படியான வாகனங்களில் சென்று வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு குறித்த கூட்டம் நடைபெற்றது,
இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ப.கனகராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்,
மாவட்ட இணைச் செயலாளர் L.K.முருகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பொண் அமிர்தம், ஹென்றி, தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் தேமாங்குளம் இராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மாநிலத் துணை அமைப்பு செயலாளர் திரு.பே.கிருபைராஜ் அவர்கள்,
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.மு.மன்சூர்அலி அவர்கள், திரு.கரு.இராஜசேகரன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ், ஆழ்வை ஒன்றிய செயலாளர்கள் A. இராஜன் (மத்தி), ஆத்தூர் கேசவன் (கிழக்கு), N.செல்வகுமார் (மேற்கு), ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர்கள் P.ராமராஜன்(கிழக்கு), திருமணிவாசகம் (மேற்கு), தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்க்கு வழக்கறிஞர் அணி மாசாணமூர்த்தி நன்றி தெரிவித்தார்…







