கிராம கோவில்களில் வழிபாடு கூட செய்யமுடியாத நிலையில் தினம் தினம் சாதி சண்டைகள் உருவாகிறதே அதற்கு எப்போது தீர்வு காண்பீர்கள்?
அறிக்கைகள்
415 Views
Published:
14 Aug 2021
![]()
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக 56 பேருக்கு அரசாணை கொடுத்தால் சாதி ஒழிந்துவிடுமா? கண்டதேவியில் தேர்வடம் இழுக்கவும், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் மண்டகப்படி கொண்டாடவும், சேலம் திரௌபதி அம்மனை வழிபடவும் 96-01 திமுக ஆட்சியில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்க எப்போது அரசாணை வரும்?
பெரிய கோவில்களில் கர்ப்ப கிரகங்களுக்குள் நுழைய மட்டுமே கட்டுப்பாடு இருந்தது. ஆனால், ஆயிரமாயிரம் கிராம கோவில்களில் வழிபாடு கூட செய்யமுடியாத நிலையில் தினம் தினம் சாதி சண்டைகள் உருவாகிறதே அதற்கு எப்போது தீர்வு காண்பீர்கள்?
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
14.08.2021






