புதிய தமிழகம் கட்சியின் ‘Eid Mubarak’ நல்வாழ்த்துக்கள்
336 Views
![]()
உலகெங்கும் ’பக்ரீத்’ என்று அழைக்கப்படக்கூடிய தியாகத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் புதிய தமிழகம் கட்சியின் ‘Eid Mubarak’ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடும் இரண்டு விழாக்களில் ’பக்ரீத்’ பண்டிகையும் சிறப்புடையதாகும். ஒரு இறைவன் இறைதூதரிடத்தில் ஒரு ஆட்டை அனுப்பி அதற்கு பதிலாக அவர் நேசிக்கக் கூடிய வேறு ஒன்றை தனக்கு தியாகம் செய்ய வேண்டும் என கேட்டதற்கு தன்னுடைய மகனையே அனுப்பி வைத்தார் என்ற இஸ்லாமிய மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ‘festival of sacrifice’ தியாக திருநாள் எனப்படும் ’பக்ரீத் பண்டிகை’ உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளில் இஸ்லாமியர்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அன்பு பொங்கவும்; அவர்களின் நெஞ்சத்தில் அறம் தழைக்கவும்; சிந்தனையில் ஞானம் பெருகவும் வாழ்த்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
21.07.2021







