மதுரை மாநாடு

இடம்:தமுக்கம் மைதானம் - தெப்பக்குளம்
தேதி:6 மார்ச் 1995

Loading

1996 – மதுரை மாநாட்டு அழைப்பிதழ்

(தேவேந்திரகுல சொந்தங்களுக்கு

தலைவர் அவர்களே தன் கைப்பட எழுதிய கடிதம்)

04.03.1996

 

தமிழ் மண்ணுக்கு சொந்தக்காரர்களாக விளங்கி; தமிழ் மக்களிடையே அரசியல், பொருளாதாரம், சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி; சேர, சோழ, பாண்டிய வம்ச மன்னர்களை ஈன்றெடுத்த பெருமை மிக்க தேவேந்திர குல வேளாளர் சமூகம் இன்று தாழ்த்தப்பட்டவர்களாக, அரிஜன்களாக ஒதுக்கப்பட்டு வாழ்க்கையில் அடிமட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது

நம் இழந்த பெருமைகளை எல்லாம் மீட்டிட எழுச்சி கொள்ளும் பொழுதெல்லாம் அடக்குமுறை ஏவி விடப்பட்டது. கொடியங்குளத்தில் நம் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நாடறியும்! நம்முடைய இனம் எழுச்சி பெற நாம் ஒன்றுபட்டு போராடுவதை தவிர்த்து பல்வேறு கட்சிகளில் கட்டுண்டு கிடந்தோம்! நம் அதிகாரத்தை அவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்து சில்லறை சலுகைகளுக்கு நாள் கணக்கில் மண்டியிட்டு கிடந்தோம்! இதனால் நம் தனித்தன்மை இழந்தோம்! நாம் வெறும் படிக்கல்லாக வீழ்ந்து கிடந்தோம்! நம் தலைமையில் ஏறி செல்கிறவர்களுக்கு இடம் கொடுத்தோம்! இக்கதியானோம்.!!

நம்முடைய இன மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் நம்மின தலைவர்கள், முன்னோடிகள் பலரும் இதற்கு முன் ஈடுபட்டிருந்தாலும், நம் மக்களின் பங்களிப்புக்காக பாதுகாப்புக்காக நிரந்தரமான இயக்கத்தையும், அமைப்பையும் உருவாக்கும் நோக்கம் நிறைவேறவில்லை. இதுவரை மாநாடுகள் நடத்தினாலும் கூடினோம்; கோஷம் போட்டோம் என்பதை தவிர குடிக்க நீரின்றியும், குந்த வீடு இன்றியும் நாள் கணக்கில் நம் மக்கள் கிடக்கும் பட்டினிக்கும் நம் மீது தினம் தினம் திணிக்கப்படும் சாதிக் கொடுமைக்கும் முடிவு கட்ட ஒரு தீர்க்கமான செயல் திட்டங்கள் தரப்படவில்லை.

எனவே, நம்மின மக்களுக்கு இனியாவது நல்ல வழியை காட்ட தீர்க்கமான நெறிமுறைகளை சொல்லிட நடைபெறுவதே நாளை நடக்கும் மாநில நாடு மாநாடு ஆகும். இது தனி நபர் புகழ் பாடவும் அல்ல ,ஆட்களை காட்டி அரசியல் ஆதாயம் தேடவும் அல்ல..!!

சமூக பொருளாதார ஆதிக்கத்திலிருந்து நம் மக்களை விடுதலை செய்ய, நம் மக்கள் கட்டுண்டு கிடக்கும் கட்சியின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்வதே முதல் படி ஆகும்.!! தலையாய வேலையாகும்.!!

எனவே, கட்சி மார்ச்சரியங்களையும், குழு வேறுபாடுகளையும் மறந்து ’தேவேந்திரர்கள்’ என்ற ஒரே உணர்வில் நம் இனமான தலைவர் இம்மானுவேல் கண்ட சிவப்பு – பச்சை வர்ணக் கொடியின் கீழ் மட்டுமே ஒன்றிணைவது பிரதான பணியாகும்

எனக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளின் காரணமாக நான் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல இயலவில்லை. எனவே, இதையே அழைப்பாக ஏற்று பாச உணர்வுடன் தேவேந்திரர்கள் ஒன்று கூடுவோம்.!!

மாநாட்டுப் பணிகள் முதன்முறையாக காவல்துறை அனுமதி பெற்று தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பேரணி, மாநாட்டு இடம் மற்றும் வாகனங்களுக்கும் வழி நெடுக நெடுஞ்சாலையிலும் நல்ல சிறப்பான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுயக் கட்டுப்பாடு காத்து பேரணியும், மாநாடும் வெற்றி பெறுவதே நம் தலையாய நோக்கம் என திரண்டு வர அன்புடன் வேண்டுகிறேன்.

மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் பேரணி புறப்படும் ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும், கோர்ட் முன்பும் நிறுத்துமாறு வேண்டுகிறேன். வாகனங்கள் பேரணியின் பின் ஒவ்வொரு மாவட்டமாக அணிவகுத்து வர வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் இசைக்குழு, வாத்திய குழுக்கள் வரலாம்.

பேரணியின் துவக்கத்தில் மகளிர் அணியினர் மட்டுமே அனுவகுத்துச் செல்ல வேண்டும்; மகளிர் அணியை தொடர்ந்து, இளைஞர் அணியினரும், மாணவர் அணியினரும் மாவட்ட வாரியாக பின்தொடர வேண்டும். கோஷங்கள் எழுதிக் கொடுக்கப்பட்டவைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

டாக்டர் கிருஷ்ணசாமி

தேவேந்திரகுல வேளாளர் பேரணி

தேவேந்திரகுல வேளாளர் கூட் டமைப்பின் முதல் மாநில மாநாட்டை யொட்டி மதுரை யில் புதன்கிழமை மாலை பேரணி நடைபெற்றது . அழகர் கோவில் சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் மாநிலத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மாலை அணிவித்து பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் கோரிப்பாளையாம் / கல்பாலம் வடக்குமாசி வீதி மேல மாசி வீதி தெற்குமாசி வீதி காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் வரை சென்ற இந்த பேரணி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்பேரணி . யில் இளைஞர்கள் அதிகமாக பங்கேற்றனர் . பேரணியில் கலந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந் தும் பேருந்துகள் , வேன்கள் , லாரிகள் உள்ளிட்ட நூற்றுக்க ணக்கான வாகனங்களில் இந்த அமைப்பினர் வந்திருந்தனர் பேரணியே கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி முருகன் முன்னாள் சட்டப்பே ரவை உறுப்பினர் தனுஷ்கோடி உள்ளிட்டோர் தெற்குமாசி அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்து பார்வையிட்டனர் . பேரணியினர் தீண்டாமை ஒழிப்யை வலியுறுத்தியும் , ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்ப டும் சலுகைகள் முழுமையாகக் கிடைக்க செய்ய வேண்டும்சாதி சண்டைகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும் . விவசாயிகளுக்கு நியாயமான கூலி கிடைக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என் பதை வலியுறுத்தி கோஷங்கள் இட்டவாறு வந்தனர் . இந்தப் பேரணியைத் துவக்கி வைப்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி தமிழக அரசும் காவல்துறை யும் இந்த மாநாட்டுக்கு வந்த வர்களுக்கு வேண்டுமென்றே இடையூறு அளித்தனர் நகரின் எல்லையில் பத்து சோதனை சாவடிகளில் காவலர்களை நிறுத்தி நீண்ட நேரம் சோதனை என்ற பெயரில் காத்திருக்க செய்தனர் பேரணியில் கூட்டம் சேர்வதை தடுக்கவே இவ்வாறு செய்தனர் என்று குற்றம் சாட்டினார்

மதுரை போக்குவரத்து பாதிப்பு:

இந்தப் பேரணியில் சுமார் 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் என்றும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படா மல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மதுரை மாநகர காவல்துறை ஆணையர் எஸ் பி வெங்கட கிருஷ்ணன் தெரிவித்தார்

பேரணியையொட்டி மதுரை நகரின் பல்வேறு இடங்களில் சுமார் 5 மணி நேரம் பாதிக்கப்பட்டது பேரணையின் போது சில இடங்களில் கல்லெரி, சம்பவங்கள் நடைபெற்றன போலீஸ் அந்த சென்றவுடன் அமைதியை ஏற்படுத்தினார்

மாநாட்டுத் தீர்மானங்கள்:

இன்றுவரை தமிழ்நாட்டில் தேவேந்திர குல மக்கள் மீதும், பிற ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்கள் மீதும் தீண்டாமை பல வடிவங்களில் அமுலாக்கப்பட்டு வருகிறது. அதை ஒழித்துக் கட்ட இம்மாநாடு கீழ்க்கண்ட திட்டங்களை முன் வைக்கிறது.

அ) தமிழக அரசும், காவல் துறையும், தீண்டாமைக் கொடுமைக்கு ஆதரவாக இருப்பதால், இனி தீண்டாமை ஒழிப்பு போரை பொதுமக்களே கையிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆ) தீண்டாமை பாவிக்கப்படும் கிராமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பிற கிராமத்து மக்கள் ஒத்துழைத்து இணைந்து போராடி தீண்டாமை செயல்களை அறவே ஒழிக்க வேண்டும்.

இ) தனி டம்ளர்களை வைத்திருக்கும் டீ கடைகள் அடித்து நொறுக்க வேண்டும்.

ஈ) கிராமப் புறத்துக் கோயில்களில், தீண்டத்தகாதவர் உள்ளே நுழையக் கூடாது என்று இருக்கும் கோயில்களுக்குள், உள்ளூரிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களை, அழைத்துச் செல்ல, எத்துணை தடைவரிலும் தகர்த்து எறியவேண்டும்.

உ) கிராமப்புறத்து பொதுக் கிணறுகள், பொதுக் குளங்கள், பொதுக் குழாய்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள கிராமங்களில், அதை ஆதிக்க சாதிகளும் பயன்படுத்த விடாமல் போய்த் தடுக்க வேண்டும்.

ஊ) கிராமப் புறங்களில், ஆதிக்க சாதியினர் வாழும் தெருக்களில், நமது மக்கள் செருப்புப் போட்டுக் கொண்டு போக அனுமதி மறுக்கப்பட்டால் அனுமதி மறுக்கும் ஆதிக்க சாதி வெறியர்களின் செருப்புக்களையும் பறித்தெடுக்க வேண்டும்.

எ) ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்கள் மத்தியல் எழவு சேதி சொல்ல, குழி வெட்ட, மலம் எடுக்க,பறையடிக்க, செருப்பு தைக்க போகின்ற பழக்கங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஏ) பள்ளன், பறையன், சக்கிலியன் என்று இழிவாக அழைத்தலை, அரசு அட்டவணையிலிருந்து நீக்க வேண்டும். தேவேந்திரர், ஆதிதிராவிடர். அருந்ததியர் என்று அழைக்கப்பட வேண்டும்.

ஐ) வன்முறை நம் மீது கட்டவிழ்த்துவிடப்படும் போது 1989ன் கொடுமை தடுப்புச் சட்டமும் 1995 விதிகளும்படி சாதி வெறியரின் துப்பாக்கிகளை பறித்து நமக்கு துப்பாக்கி வழங்க வேண்டும். கிராமத்திலும் தற்காப்பு படைகளை நிறுவிக் கொள்ள வேண்டும்.

2) தேவேந்திர குல வேளாளர் மக்கள், தங்களை அடிமைப்படுத்தியுள்ள அரசியல் கட்சிகளிலிருந்து விலகி, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பில் அணி திரண்டு, பல நூறு ஆண்டுகால அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற போராட வேண்டும்.

3) தமிழ் மண்ணில், மண்ணின் மைந்தர்களாக உழவுத் தொழிலின் முதுகெலும்புகளாக இருப்பவர்கள் தேவேந்திர குல மக்கள். இந்த உழவர் கூட்டத்தை அடக்கி ஆளத் தொடங்கினார்கள், உழைப்பை மறுக்கும் உன் மத்தர் கும்பல்கள். இந்த நிலையில் தேவேந்திர குல மக்கள் இன்று அதிகாரம் இழந்து இருக்கிறார்கள்.

4) 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த சுதந்திரம் தேவேந்திர குல மக்களாகிய நமக்கு வந்தடையவில்லை. 50 விழுக்காடு நிலமற்ற, விவசாயக் கூலிகளாக இருந்த நமது மக்கள், 48 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 90 விழுக்காடு நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக, நாளுக்கு நாள் திவாலா ஆகிய நிலை உருவாகியுள்ளது.

சட்ட ரீதியான அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கூலி கூட அமுலாக்கப்படவில்லை. நமது மக்கள் வாழும் பகுதிகளில் குடிநீர் கிடைப்பதற்குக் கூட வழி வகை செய்யப்படவில்லை. இன்றளவும் கூரை வாய்ந்த வீடுகளிலேயே வாழ்கின்ற நிலை உள்ளது. மனை நிலத்திற்கு பட்டா இல்லாதவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். பாசன வசதி உள்ள நிலங்கள் அன்றாடம் நமது மக்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன. நில முதலைகள் மட்டுமல்லாமல், அரசு அதிகாரிகளாலும், சமூக நலக்காடுகள், காட்டிலாகா ஆகிய பெயர்களில் நமது மக்கள் அனுபவித்து வரும் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. புறம்போக்கு நிலங்கள் கூட பண்ணையார்களாலும் திடீர் பணக்காரர்களாலும் கபளீகரம் செய்யப்படுகின்றன.

தேர்தல்கள் மூலம் தனித்தொகுதிகளில் ”நமது மக்களின் உரிமைக்காக” என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கே தாங்கள் சார்நதிருக்கின்ற கட்சிகளின் அடிமைகளாக உருமாற்றப்படுவதால் நமது மக்களுக்கு முழுமையான துரோகம் இழைத்து நிற்கிறார்கள். அத்தகைய முறையில்தான் இன்றைய பொதுவாக்காளர் தொகுதிகளாக தனித்தொகுதிகள் செயல்படுகின்றன. இதனால் உண்மையான தேவேந்திர குல, ஆதிதிராவிடர், அருந்ததியர் பிரதிநிதிகள் இத்தகைய தேர்தல் முறை மூலம் மன்றங்களுக்கு அனுப்பப்படுவது நடைபெறுவதில்லை.

5) தென் மாவட்டங்களில் காவல் துறையில் ஆதிக்க சாதி ஒன்றின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், சமூகத்தின் சகஜநிலை கெட்டு வருகிறது. ஆகவே உடனடியாக காவல் துறையில் சமபங்களிப்பு நிலவும் வகையில் மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும்.

6) தேவேந்திர குல மக்களின் போராட்டத்தின் விளைவாக அறிவிக்கப்பட்ட மாவீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகத்தின் பெயரை மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரன் போக்குவரத்ததுக் கழகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

ஆதிக்கவாதிகளை எதிர்த்து குரலெழுப்பிய தியாகி இமானுவேல் சேகரின் நினைவாக அவரது உருவச்சிலையை மதுரையில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு விரைவில் நிறுவும்.

7) உழவர் மக்களாகிய தேவேந்திரர் மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 5 ஏக்கர் நிலமும், பாசன வசதிகளும் வழங்க வேண்டும். இந்த இனம் சொந்தக் கால்களில், சுய மரியாதையுடன் தான் நிற்பது மட்டுமல்லாமல், இந்த நாட்டின் விவசாய உற்பத்தியையே மேம்படுத்த அதுவே வழி என்று இந்த மாநாடு உரத்த குரலில் எதிரொலிக்கிறது. சட்ட ரீதியாக தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை, நிலத்திருடர்களிடமிருந்து பறித்தெடுத்து, தலித் மக்களுக்கே வழங்க வேண்டும்.

8) கொடியன்குளம், காசிலிங்காபுரம், ஆலந்தா, மலைப்பட்டி காவல்துறை அட்டூழியங்கள் மீது சி.பி.ஐ. விசாரணை கோரி போராடி வரும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பையும், அதன் மக்கள் இயக்கத்தையும் நசுக்க தமிழக அரசு முயன்று வருகிறது. நான்கரை ஆண்டு காலமாக தேவேந்திர மக்களை அடக்கியும். துப்பாக்கியால் சுட்டும், நிலங்களைப் பறித்தும், கொள்ளையடித்தும் சூறையாடிய ஜெ-சசிகலா கும்பல் ஆதிக்கம் அடியோடு தூக்கியெறியப்பட வேண்டும். வருகின்ற தேர்தலில், இந்த ஆதிக்க சாதி வெறிக் கும்பலைத் தோற்கடிக்குமாறு தமிழக மக்களை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிலவள வங்கிகள் ஆகியவை நமது மக்களுக்கு எந்த வகையிலும் பயன்தரத்தக்கதாக நடத்தப்படுவதில்லை, அவை நமது மக்களுக்கு சுடன் வழங்கவோ, பொருளாதார மேம்பாட்டிற்கோ, சுய தொழில் வாய்ப்புக்கோ. பல நிபந்தனைகள் போட்டு பயன்படுத்த முடியாமல் தடுத்து விடுகின்றன.

அரசு உதவியாக பல கோடி ரூபாய்களைப் பெற்று பின், தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு தொழில் துவங்க அனுமதி பெற்ற தனியார் தொழிற்சாலைகள் நமது மக்களை பணிகளில் சேர்ப்பதில்லை. இட ஒதுக்கீட்டையும் அமுலாக்குவதில்லை,

சமூகத்தில் தீண்டாமை நிலவுவதால், நமது மக்கள் பொது இடங்களில் வர்த்தகம் செய்ய தடையாக உள்ளது. ஆகவே, நகரங்களும் பிற வளர்ச்சித் திட்டங்களும் நமது மக்களது பங்களிப்பைத் தவிர்த்தே நடந்து வருகின்றன.

நமது பெண்கள் இழிவுபடுத்தப்படுவது, சமகூலி மறுக்கப்படுவது. பலாத்காரம் செய்யப்படுவது போன்ற சித்திரவதைகட்கு சாதி வெறிபிடித்த ஆண் ஆதிக்கவாதிகளால் உள்ளாக்கப்படுகிறார்கள்.

வளர்ச்சிப் பணித் திட்டங்கள், நமது மக்கள் வாழும் பகுதிகட்கு சாலை வசதி, குடிநீர் வசதி, பள்ளிக்கூடம், நூலகம், ரேஷன்கடை, பொதுக் கிணறு. மருத்துவமனை ஆகியவற்றை மறுத்து, ஆதிக்க சாதியினரது குடியிருப்பு பகுதிகட்கு மட்டுமே செய்யப்படுகின்றன. நமது மக்களுக்கு என்று ஒதுக்கப்படும் தொகையும், ஆதிக்க சாதி காண்டிராக்டர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது.

காவல்துறையில், ஆதிக்க சாதியினரது திட்டமிட்டு நுழைக்கப்பட்ட ஆதிக்கம் ஒவ்வொரு காவல் நிலையமும் நமது மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்ற நிலைமையை உருவாக்கியுள்ளது. அதன் மூலம் நம் மீது பொய் வழக்கு போடுதல். சிறய பிரச்சினையையும் நமக்கெதிராகப் பெரிதாக திருப்புவது, நமது மக்களது சுதந்திர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது, சாதி வெறியர்கட்கு பாதுகாப்பு கொடுப்பது நமது மக்களிடையே பீதியைக் கிளப்புவது ஆகிய வேலைகளைச் செய்து வருகிறது.

நீதித்துறையோ ஏழையின் செயல் அம்பலம் ஏறாது என்ற பழமொழிக்கொப்ப. நமது மக்கள் அணுகவே முடியாத இடமாக இருக்கிறது. அப்படியே அணுகினாலும், நமது மக்களின் நிலைமை, உணர்வுகள் பற்றி புரிந்து கொள்ள முடியாத, ஆதிக்கவாதிகளின் நியாயங்களை போதிக்கின்ற கூடமாக அதை மாற்ற முயல்கிறார்கள்.

மேற்கூறிய பிரச்சினைகளை எதிர்கொள்ள சட்டமன்ற, நாடாளுமன்றங்கட்டு, உண்மையான மக்கள் பிரதிநிதிகளை அனுப்பிவைக்க தனி வாக்காளர் தொகுதிகளை கொண்டு வர வேண்டும். இதை மத்திய அரசின் கவனத்திற்கு இத்த மாநாடு கொண்டு வருகிறது.

தொடர்ந்து நமது மக்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளைத் தவிர்க்கவும். சாதி வெறியர்களுடன் சுமூக நிலையில் இனி வாழ முடியாது என்ற நிலைமை உருவாகிவிட்டதால், எங்கள் மண்ணை எங்களுக்குப் பிரித்துக் கொடு, தனித்து நாங்கள் வாழ்ந்து, நாகரீகத்தின் அனைத்து வளர்ச்சிகளையும் அனுபவிக்க வேண்டும். எங்கள மக்கள் மேம்பட வேண்டும். அதற்கு தேவேந்திரர் தேசம் என்ற தனி மாநிலத்ததை, இந்திய அரசியல் சட்டம் 371-வது பிரிவின் கீழ், மத்திய அரசின்நேரடி பார்வையில் மாநிலம் ஒன்று அமைத்துக் கொடு, அதைப் போராடி பெற 1 லட்சம் இளைஞர்களும் யுவதிகளும் தயாராய் இருக்கிறார்கள்.

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு

பத்திரிகைச் செய்தி! 01.04.1996

நாளுக்கு நாள் பர பரப்பும், விறு விறுப்பும், வேகமும், கோபமும், மனத்தாங்கலும், துரோகமும், முகாம் மாறுவதும் நடந்து வரும் சூழ்நிலையில், வருகின்ற பொதுத் தேர்தலில், மக்கள் இயக்கமாக மலர்ந்து வரும் ‘தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு’ பதட்டமின்றி, தான் எடுத்து வைத்த பாதை பிசகாமல், தனது தேர்தல் வியூகத்தைத் திட்டமிட வேண்டி உள்ளது.

எங்கும். எதிலும் ‘ஆதிக்கசாதி’யின் செல்வாக்கும், அரவணைப்பும் கோலோச்சும் ‘தேர்தல்கால’ச் சூழ்நிலையில், நாம் நமது ‘பொது எதிரி’யை வீழ்த்தும் லட்சியப்போரில், ‘ஒட்டு’ எனும் ஆயுதத்தையும் கூட, நமது ‘சுயமரியாதை’யை அறுதியிடும் போக்கில் பயன்படுத்த வேண்டியுள்ளது.

மார்ச்-6 நாள், நாம் நடத்திய மதுரை மாநாட்டில், ‘தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர்” மட்டுமல்லாமல், தமிழக மக்கள் அனைவரும், மக்கள் விரோத ‘ஜெ-சசி” கும்பலை வருகின்ற தேர்தலில் தூக்கியெறிய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டோம்.

இன்று, அதுவே ‘ஜெ-சசி-ராவ்’ கும்பலை, தமிழக மக்கள் தேர்தலில் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என நமது வேண்டுகோளாக வளர்ந்து நிற்கிறது. இத்தகைய நமது அறைகூவல், இன்று தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக மாறிவிட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ‘தீண்டாமை’க் கொடுமையால் இழிவுப்படுத்தப்பட்ட ‘தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்கள், மாறி, மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளை நம்பி, அவமதிக்கப்பட்டு தற்போது ‘சுயமரியாதை’யுடன் தங்களைத் தாங்களே பலப்படுத்திக் கொண்டு எழுந்து நிற்கும் காலம் தமிழகத்தில் வந்து விட்டது.

இன்றைய அடிமை வழிமுறையில் தனித் தொகுதிகளில், ‘கட்சி அடிமைகளை” உருவாக்கும் மனப்பான்மையை எதிர்த்து, ‘பொதுத் தொகுதிகளைக் குறிவைக்கும் லட்சியபாங்கில், ‘தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், வருகின்ற ‘பொதுத் தேர்தலில்”. நான்கு முனைப்போட்டியை சந்திக்கிறது. ஆண்டாண்டுகாலமாக ஒடுக்கப்பட்ட ‘தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்கள் ஒன்றுபட்டு நாலாவது அணியாக எழுந்து வந்துள்ளனர்.

மூன்று அணிகளும் வாக்குகளை சிதறடிக்கும் போது, ‘தீண்டாமை வாளால்’ தீண்டப்பட்ட மக்கள் மட்டும், சிந்தாமல், சிதறாமல் தங்களது வாக்குகளை நான்காவது அணிக்கு அளித்து “உண்மையான எதிர்க்கட்சி எங்கள் மக்கள் தான்’ என நிரூபிக்கும் கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆகவே, ஆளும் ஆதிக்கக் கும்பலைத் தோற்கடிக்க, ‘தேவேந்திரர். ஆதிதிராவிடர், அருந்ததியர்” வாக்குகளின் பெரும்பலத்தால் நாம் வெற்றிபெற இருக்கும் தொகுதிகளைக் கணித்து தென்மாவட்டங்களில் ‘தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு’ தனது வேட்பாளர்களை நிறுத்திவைக்கிறது. இந்தத் தொகுதிகளில், வெற்றி வாய்ப்புள்ள எங்களுக்கு ஆதரவு கொடுப்பதே, எதிர்கட்சிகள் எடுக்க வேண்டிய சரியான தந்திரம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ‘தீண்டாமையால் பாதிக்கப்படும் மக்களுக்காக, குரல் கொடுப்பதாகக் கூறும் ‘எதிர்க்கட்சிகள்”, “பெரியார், அம்பேத்கர் வழிகளை ஏற்பதாகக் கூறுவோர், ஆளும் கொள்ளைக் கூட்டத்தைத் தோற்கடிக்க ஒட்டுமொத்தமாக எழுந்துவிட்ட எங்களது வெற்றிவாய்ப்பை புரிந்து கொண்டு, கீழ்க்கண்ட தொகுதிகளில் வாக்களிப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொகுதிகள்: முதல்பட்டியல்:

சட்டமன்றத் தொகுதிகள்:

1. ஒட்டப்பிடாரம் (தனி)

2. ஸ்ரீவைகுண்டம்

3. விளாத்திகுளம்

4. அம்பாசமுத்திரம்

5. கடையநல்லூர்

6. வாசுதேவநல்லூர் (தனி)

7. ராஜபாளையம் (தனி)

8. ஸ்ரீவில்லிபுத்தூர்

9. சிவகாசி

10. கடலாடி

11. முதுகுளத்தூர்

12.சேடப்பட்டி
13. பெரியகுளம்

14. நிலக்கோட்டை

15. நாமக்கல்

நாடாளுமன்றத் தொகுதிகள்:

1) நெல்லை

2) தென்காசி

3) சிவகாசி

s2 Tags Tamilnadu