இறால் பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள், சுகாதாரக் கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான ஆய்வு தேவை!
9 Views

![]()
இறால் பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள், சுகாதாரக் கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான ஆய்வு தேவை!
…………………………………………..
திருவள்ளூர் பெரியபாளையம் இறால் மீன்கள் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா கசிவால் ஏழு பேர் உயிரிழந்ததாகவும், பலர் ஆபத்தான நிலையில் அருகாமையிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்திகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்த நிகழ்வு ஏன் நடந்தது என்பது குறித்தும், அதே போன்று தமிழகத்தில் தூத்துக்குடி, இராமநாதபுரம், பட்டுக்கோட்டை, நாகை, திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள இறால் பண்ணைகள் மற்றும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்தும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ 25 லட்சம் நட்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
21.06.2026






