ஒடிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு தென்காசி மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது மற்றும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் முதல் மாநாட்டிற்கு ஆலோசனையும் நடைபெற்றது

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜையா அவர்கள் தலைமை தாங்கினார் மாநில நிர்வாகி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார் மற்றும் ஒன்றிய நகர மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள் புளியங்குடி நகர செயலாளர் சாமிதுரை நன்றியுரை வழங்கினார்