*ரூபாய் ஒரு லட்சம் கோடி ஊழல்
* 22 பேர் கள்ளச்சாராய மரணம்
*CBI-விசாரணை
* பாட்டிலுக்கு பத்து ரூபாய் பகிரங்க பாலாஜி
*மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்திட,
*சட்டவிரோத பார்களை மூடிட
*பூரண மதுவிலக்கு அமல்படுத்திட மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமிMD,Ex-MLA அவர்களின் ஆணைக்கிணங்க பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே (27.05.23) சனிக்கிழமை காலை 11 மணியிலிருந்து 12 மணி வரை ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் த.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.
புதிய தமிழகம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் குணா, மதியழகன், மணிகண்டன், வெடிசுரேஷ், வெங்கடேஷ், சதீஷ், சசிகுமார், கபிலன், ராதிகா மற்றும் பெண்கள்
பொதுமக்கள்,
இளைஞர்கள்,
சமூக ஆர்வலர்கள்
அனைவரும் திரளாக கலந்து கொண்டு
குடி கொடுமையில் இருந்து தாய்மார்களையும்
குடும்பங்களை
காத்திடும் ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தார்கள்
