Loading

உலகெங்கும் வாழும் தமிழர்களை இணையம் எனும் மாற்றுப்பேரூடகம் மூலம் ஒன்றிணைக்கும் அவாவினால் இந்த இணயத்தளத்தை தொடங்கியிருக்கிறோம். எங்களது போராட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் தகவல் நெடுஞ்சாலையில் இணைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். தமிழர் பிரச்சினைகளை, போராட்டங்களை, எண்ணவோட்டங்களை நீங்கள் தடையின்றி எங்களுக்கு இணையம் மூலம் நாடுகள் மற்றும் எல்லைகள் கடந்து தெரிவிப்பதை இம்முயற்சி சாத்தியமாக்கும் என்ற அசாத்திய நம்பிக்கையுடன் உங்களை இத்தளத்தின் மூலம் சந்திக்கிறோம். உங்கள் ஆலோசைனகள் மற்றும் செய்திகளை எங்களுக்கு உடனுக்குடன் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினால் உங்கள் குரலை தகுந்த இடத்தில் ஒலிக்க பாடுபடுவோம்.