1. சாதி மறுப்புத் திருமணம் செய்கிற பட்டியலின இளைஞர்கள் கௌரவப் படுகொலை செய்யப்படுவதையும், சாதிய வன்முறை படுகொலை செய்யப்படுவதையும் தடுத்திட நடவடிக்கை எடுக்காத மாநில அரசை புதிய தமிழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தமிழக சட்டமன்றம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. எனவே புதிய சட்டங்கள் இயற்றியும், இருக்கின்ற சட்டங்களை சரியாக பயன்படுத்தியும் கௌரவக் கொலைகளையும், சாதிய வன்முறைக் கொலைகளையும் தடுத்திட மத்திய, மாநில அரசுகளை புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.

2. திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியிலுள்ள கிராமங்களில் தமிழ்நாடு காகித தொழிற்சாலை நிறுவனம் (TNPL) பட்டியலின விவசாயிகளின் வேளாண்மை நிலங்களை ஆக்கிரமிப்பதையும், கட்டாயப்படுத்தி நில எடுப்பு செய்து ஏழை, பட்டியலின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதையும் வன்மையாக கண்டிப்பதுடன் மேற்படி எடுக்கப்பட்ட நிலங்களை உரிய விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டுமெனவும் தமிழக அரசை புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.