தமிழ் மண்ணிலே வாழுகின்ற ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களின் மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை, அடையாள உரிமைகளை மீட்பது.
பரந்துபட்ட பாரத தேசத்தில், அனைத்து மக்களின் வாழ்வுரிமையையும், வழிபாட்டு உரிமையையும் மீட்டெடுக்கவும், அவர்களிடத்தில் உள்ள பேதைமைகளைப் நீக்கி, ஒற்றுமையை உருவாக்குவது; அவர்களை ஒருங்கிணைப்பது.
சமத்துவத்தையும், சமபங்கையும்(Equality –Equity) உறுதிப்படுத்தல்
ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களுக்கான மறுக்கப்பட்ட உரிமைகளை சமன் செய்தல்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திடல்
அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம் இலவசமாக கிடைத்திடல்.
இயற்கை, நிலம், நீர், சுற்றுச்சூழல் மாசில்லா உலகம் படைத்தல்.
பெண்ணுரிமை, மண்ணுரிமை, மனித உரிமை, சமய வழிபாட்டுரிமை காத்திடல்.
சமூகநீதி, சமநீதி சமயநீதி, சகோதரத்துவம், சமத்துவம் பேணுதல்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறாமல் காத்தல்
வேளான்குடி மக்களின் அடையாளங்களை மீட்டல்.
இனத்தில் தமிழனாய், ஒற்றுமையில் இந்தியனாய் இருத்தல்
உலகத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது
மக்களுக்கான மக்களாட்சி தத்துவத்தை காத்தல்
இந்திய ஜனநாயகத்தை காத்தல்
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுதல்
மது-புகை-போதை இல்லா தேசம் படைத்தல்
சாதி, மத, பொருளாதார ஏற்ற தாழ்வற்ற நிலையை உருவாக்குதல்
அனைத்து தரப்பு மக்களையும் தற்சார்பு கைவினைஞர்களாகவும், தொழில் முனைவோராகவும் உருவாக்குதல்.
தேசத்தை வளப்படுத்தல்
பெண்கள் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், இளைஞர் நலனை மேம்படுத்தல்.
லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.
பிறப்பில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் எண்ணங்களை நீக்கி, ’இந்து’ என்ற ஒற்றை அடையாளத்தில் பரிணமிக்க அனைவரையும் வலியுறுத்தல்.
இந்து, கிறித்தவர், இஸ்லாமியர் என்ற மத பேதங்களை நீக்கி, தேசப் பற்றுடன் ’இந்தியர்’ என்ற ஒற்றை அடையாளத்தை வென்றெடுப்பது.
கச்சத்தீவை மீட்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டல்
தமிழர் பண்பாட்டையும், இயற்கை வழிபாட்டையும் கடைபிடிப்பது.
சாதி, மத, இன, பண்பாட்டுச் சிதறல்களை போக்குவது.
சாதிய பிணக்குகளையும், வல்லாதிக்க போக்குகளையும் ஒழித்துக்கட்ட ஓயாது களமாடுவது.
விளிம்பு நிலை மக்களுக்கு இழைக்கப்படும் சமூகக் கொடுமைகளுக்கு சட்ட ரீதியாக போராட்டங்களை முன்னெடுப்பது.
எளிய மக்களையும், பூர்வீக குடி மக்களையும் ஆட்சி – அதிகாரத்தில் அமர்த்துதல்.
இந்துக்களிடையே நிலவக்கூடிய ஏற்றத்தழ்வுகளை ஒழித்து, சாதிகளற்ற ’இந்து’ சமுதாயத்தை உருவாக்குதல்
மொழி வாதம், இனவாதம், மதவாதம் பூசி இந்த மண்ணை துண்டாட எவரையும் அனுமதிக்கக் கூடாது
தமிழகத்தில் சமூக நல்லிணக்கமும், பொது அமைதியும் நிலவ செய்தல்
உழவர் – தமிழர் – இந்து – இந்தியர் ஒற்றுமையை தொடர்ந்து கடைபிடித்தல்
இடஒதுக்கீட்டை அமலாக்குவதில் 100% இடஒதுக்கீட்டு முறையை கடைபிடித்தல்