புதிய தமிழகம் கட்சியின் 25-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இணையவழி உறுப்பினர் சேர்க்கை புதிய தகவல் சேகரிப்புடன் தொடங்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது ?
கீழ்காணும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Submit என்ற சிவப்பு நிற பட்டனை அழுத்தவும் உங்களது விண்ணப்பம் இளையதள நிர்வாகியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்

அடையாள அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்வது ?
இணையதள நிர்வாகி ஒப்புதல் அளித்த பின்பு விண்ணப்பத்தின் கடைசில் உள்ள Download ID Card என்ற பச்சை நிற பட்டனை அழுத்தி தாங்கள் பதிவு செய்த தேசிய அடையாள அட்டை (ஆதார்-Aadhaar) எண்ணை பயன்படுத்தி கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

புகைப்படம் பதிவேற்றம் செய்யும் பொழுது கவனிக்க வேண்டியவை

# தெளிவான நேர்த்தியான வண்ணமயமான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும்

# பாஸ்போர்ட் அளவிலான முகம் தெளிவான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும். இது உங்களது அடையாள அட்டை என்பதை கவனத்தில் கொள்க.

# புகைப்படத்தை பதிவேற்றம் செய்தபின் அது நேராக இருக்கிறதா? என்பதை சரி பார்த்த பின்பு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

# 500 KB க்கு மிகாமல் இருக்கும் புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்யமுடியும்.

உங்களது பெயர், தந்தை / கணவர் பெயரை பதியும் பொழுது கவனிக்க வேண்டியவை
# உங்கள் பெயருக்கு முன்னோ பின்னோ தந்தையின் பெயரையோ அல்லது முதல் எழுத்தையோ பதிவு செய்ய வேண்டாம்

# உங்கள் தந்தை அல்லது கணவரின் பெயரை பதிவு செய்யும் பொழுது நீங்கள் விரும்பினால் அவரின் பெயருக்கு பின்னால் அல்லது முன்னாள் அவருடடைய தந்தையின் முதல் எழுத்தை பதிவிடவும்

# பெயரின் எந்த இடத்திலும் புள்ளிகளை வைக்க வேண்டம். வேண்டுமானால் ஒரு இடைவெளி விடவும்.

விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு என்ன ?
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பித்தவுடன் பதிவிறக்கம் செய்யலாமா ?
முடியாது. இணையதள நிர்வாகி ஒப்புதல் அளித்த பின்பு நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 1 மணிநேரத்திலிருந்து 48 மணிநேரத்தில் ஒப்புதல் தரப்படும்.

விண்ணப்பத்தில் தவறான தகவல் மறந்து கொடுத்து விட்டால் சரி செய்து கொள்ளலாமா ?
முடியாது. நிர்வாகி மட்டுமே தற்சமயம் மாற்ற முடியும். விரைவில் விண்ணப்பித்தவர்களே தவறான தகவல்களை திருத்திக்கொள்ள வசதி செய்து தரப்படும்

தமிழ் / பிற மொழிகளை பயன்படுத்தலாமா ?
முடியாது. பெயர் மற்றும் தந்தை கணவர் பெயர் உட்பட அனைத்தையும் கண்டிப்பாக ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பிற மொழி வசதி தற்சமயம் இல்லை

எந்த நேரத்தில் உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் ?
24 மணி நேரமும் விண்ணப்பிக்கலாம்.

உறுப்பினர் அட்டையை பிரிண்ட் எடுக்கலாமா ?
தாராளமாக. ஏற்கனவே நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தாலும் பிரிண்ட் எடுக்கும் முன் மீண்டும் ஒருமுறை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதில் வேறு ஏதேனும் பிரச்சனை என்றால் என்ன செய்வது?
+91 6385225283 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
contact@ptparty.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
விண்ணப்பத்தில், விண்ணப்பிப்பதில் மேலும் ஏதேனும் குறைகள்/ஆலோசனைகள் இருந்தால் கட்சியின் தகவல் தொழில்நுட்ப குழுவினரை அணுகவும்

தெளிவற்ற, கோணலான, அடையாளம் காண இயலாத புகைப்படங்களை பதிவேற்றம் செய்தவர்கள்; தமிழில் தகவல்களை பதிவு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

விண்ணப்பங்கள் ஒப்புதல் வழங்கப்படும் நேரம்
நேரம் 07:00 PM தேதி 07-12-2022 – க்கு முன் விண்ணப்பித்தவர்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Read more