

![]()
இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு சமூகத்தின் பெயரில் ஆளும் கட்சி – அனைத்து எதிர்க்கட்சிகளையும் எதிர்த்து தன்னந்தனியாக 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தேர்தலில் ஏழை, எளிய விளிம்புநிலை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும்; அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய தீபச்சுடராகவும் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவராகவும் விளங்கிய டாக்டர் அய்யா அவர்களை விளிம்பு நிலை மக்களும் அனைத்து தரப்பு மக்களும் உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் ’ஏர் உழவன்’ சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி வாகை சூடி மகிழ்ந்தார்கள். தமிழக சட்டமன்றத்திற்குள் முதன்முறையாக கால் பதித்து டாக்டர் அய்யா அவர்கள் அனைத்து சமூகப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார்கள்.
