1. தமிழ்நாட்டில் பட்டியல் பிரிவில் உள்ள பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், வாதிரியார், தேவேந்திரகுலத்தார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அனைத்துப் பெயர்களுமே ’தேவேந்திரகுல வேளாளர்’ எனும் பொதுப் பெயரைக் குறிப்பதே ஆகும். எனவே “தேவேந்திரகுல வேளாளர்” என அரசாணை பிறப்பிக்க வும் பட்டியிலினத்திலிருந்து விடுவித்து இதர பிற்படுத்தப்பட்டோரில் சேர்க்கவும் மத்திய மாநில அரசுகளை  இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  2. பட்டியல் வெளியேற்றம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு என்பது அரசியல் கோரிக்கை அல்ல!! மாறாக இம்மண்ணின் மூத்த வேளாண்குடி மக்களின் ”உரிமைக் குரல்” ஆகும். தொல்காப்பியத்திலே மருத நில மக்களாக பெருமைப்படுத்தப்பட்ட வேளாண்மையை உயிர்த்தொழிலாக செய்துவரும்   தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை ஆதிதிராவிடர், தலித், தாழ்த்தப்பட்டவன், அரிசன், தீண்டத்தகாதவன் என அடையாளப்படுத்துவதால் எம்மின மக்கள் உளவியல்  ரீதியாக  பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். எனவே  இது இம் மக்களின் வரலாற்றுக்கு எதிராக இவர்களின் அடையாளங்களை அழிக்கும் செயலாக இச்சமூகம் கருதுகிறது  1924 ஆம் ஆண்டு BC பட்டியலில் இருந்த தேவேந்திர திருக்குலப் பள்ளர்களை  SC பட்டியலில் சேர்க்க அப்போதைய அரசு நடவடிக்கை    எடுத்தபோது  தேவேந்திர குல வேளாள சமூகத்தை சார்ந்த சீனிவாசகம் பிள்ளை அப்போதைய அரசுக்கு தேவேந்திர குல வேளாள சமூகத்தை  பட்டியலில் சேர்ப்பது,  இச்சமூகத்தை இழிவுபடுத்தும் செயலாகும் என எதிர்ப்பு தெரிவித்து  அரசுக்கு கடிதம் எழுதினார். எனவே தேவேந்திர குல வேளாள சமூகத்தை எஸ்.சி பட்டியலில் சேர்த்தது  இம் மக்களின் வரலாற்றுக்கு எதிராக இவர்களின் அடையாளங்களை அழிக்கும் செயலாக இச்சமூகம் கருதுகிறது. எனவே பண்டைய காலம் முதல்   பண்பாடு , கலாச்சாரம் , நாகரிகம் கொண்ட உழவுத்தொழிலை குலத்தொழிலாக செய்துவரும்   தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலினத்திலிருந்து விடுவித்து தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் மத்திய அரசாங்கத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும்  சேர்க்க மத்திய மாநில அரசுகளை இந்த மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.