![]()
995-ஆம் ஆண்டு நடந்த கொடியங்குளம் கலவரத்திற்கு நீதி கேட்டு, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில், டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில், தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், சென்னைப் பேணி, டெல்லி பாராளுமன்றம் முற்றுகை, தமிழகம் முழுவதும் சாலை மறியல், பந்த், முதலமைச்சர் நிகழ்ச்சி புறக்கணிப்பு, வீடுகள் தோறும் கருப்புக் கொடி என கொதித்தெழுந்து கொண்டிருந்த தேவேந்திரகுல மக்களை சமாதானபடுத்த அன்றைய முதல்வர ஜெயலலிதா, தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மாவீரர் சுந்தரலிங்கனார் பெயரில் புதிய போக்குவரத்துக் கழகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அது அறிவிப்பு நிலையிலேயே இருந்திட, தேவேந்திரகுல மக்களின் ஒற்றுமையெனும் சக்தியால், 1996-ல் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்தது. ஆட்சிக்கு வந்த கருணாநிதி அந்த அறிவிப்பை கண்டுகொள்ளாமல் இருந்ததால், அன்று தேவேந்திரகுலத்தின் முதல் அரசியல் பிரதிநிதியாக சட்டமன்றம் சென்ற டாக்டர் அய்யா அவர்கள், 1997, ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் மாவீரர் சுந்தரலிங்கனார் பெயரில் போக்குவரத்துக் கழகம் இயக்கப்படாவிட்டால், மே 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் வேறு எந்த போக்குவரத்துக் கழகமும் இயங்காது என்று எச்சரித்து கெடு விதித்தார்.
டாக்டர் அய்யா அவர்களின் கெடுவால் அதிர்ந்துபோன கருணாநிதி அரசு, அவசர அவசரமாக பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தை இரண்டாகப் பிரித்து, பாண்டிய வாரிசான மாவீரர் சுந்தரலிங்கனாரின் தியாகத்தைப் போற்றும் வகையில், விருதுநகரை மையமாகக் கொண்டு, மே 1-ஆம் தேதி முதல் வீரன் சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகத்தைத் துவக்கியது.
ஆனால், போக்குவரத்துக் ககழகம் துவக்கப்பட்ட மே 1-ஆம் தேதியிலிருந்தே ஒருசில கிராமங்களில் வீரன் சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரங்கள் நிகழ்த்தப்பட்டன; அந்தக் கலவரங்கள் சிவகாசி, இராஜபாளையம் என்று விருதுநகர் மாவட்டம் முழுக்க பரவின.
இந்நிலையில், தேனி மாவட்டம் கண்டமனூர் பால்பண்ணை கூட்டுறவு சங்கத் தலைவராக, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் கண்டமனூர் பொறுப்பாளர் வீரணன் எதிர்ப்பின்றி (Unopposed) தேர்வு செய்யப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாத சில சமூக விரோதிகள் கலவரத்தைத் தூண்டும் பொருட்டு 24.04.1997 அன்று கண்டமனூரில் ஒரு சாதித் தலைவரின் சிலையை உடைத்தனர்.
சிலை உடைப்பால் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட கண்டமனூர் தேவேந்திரகுல மக்களை சந்தித்து நிலவரம் கேட்டறிய, மே 2-ஆம் தேதி டாக்டர் அய்யா அவர்கள் தேனி சென்றார்;
மே 2-ஆம் தேதி, மாலையில் அரண்மனைப்புதூர், அமைச்சியாபுரம், பொன்னம்மாள்புரம் ஆகிய கிராமங்களுக்குச் சென்று தேவேந்திரகுல மக்களை சந்தித்துவிட்டு, ஆதிப்பட்டியில் கொடியேற்றிவிட்டு திரும்பும் போது, நள்ளிரவு 12 மணியளவில், அன்றைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்தாஸ் தலைமையிலான காவலர்கள் வழிமறித்து, எந்தவித காரணமுமின்றி டாக்டர் அய்யா அவர்களை கைது செய்தனர். 3-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு பெரியகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி, உடனடியாக திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
அதே 1997-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி கயத்தாறு சம்பவத்தால் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் எழுந்த எதிர்ப்புகள் ராஜேஸ்தாஸுக்கு நினைவில்லாமல் போயிருக்கும் போல…
நள்ளிரவில் டாக்டர் அய்யா அவர்கள் எந்த முகாந்திரமுமின்றி கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் தேனியில் துவங்கியது மீண்டும் ஓர் உரிமைப் போர்!
டாக்டர் அய்யா அவர்களை விடுதலை செய்யக் கோரி, 1997, மே 2-ஆம் தேதி நள்ளிரவு தேனியில் துவங்கிய சாலை மறியல் போராட்டத்தால் அன்று முதல் தேனி மாவட்டம் முழுக்க போக்குவரத்து முற்றாக முடங்கியது.
மே 3-ஆம் தேதி அதிகாலையில் திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு, கட்டக்காமன்பட்டி ஆகிய பகுதிகளில் துவங்கிய சாலை மறியல் போராட்டத்தில், அன்றைய திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. துரைராஜ் தலைமையிலான காவல்துறையினருடன் நடந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், போராட்டம் வீரியமடைந்து திண்டுக்கல் மாவட்டம் முழுக்க பரவி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தொடர்ந்து தென்தமிழகம் முழுக்க தன்னெழுச்சியாக சாலை மறியல் போராட்டங்களும், அதைத் தொடர்ந்து காவல்துறையினரின் திட்டமிட்ட கலவரங்களும் நடந்தன.
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பதட்டமான சூழலே நிலவியது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், அருப்புக்கோட்டை என சாலை மறியல் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இராஜபாளையம், சேத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் விடிய விடிய சாலை மறியல் போராட்டம் நடந்தது; துப்பாக்கிச் சூடும் நடந்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் முற்றாக முடக்கப்பட்டன. தென்தமிழகம் முழுக்க போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மே 3-ஆம் தேதி, இரவு வாசுதேவநல்லூரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நடத்திய சாலை மறியலில் ஜாங்கிட் தலைமையிலான காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில், கோவில்பட்டி என்று போராட்டங்கள் தொடர்ந்தன; பல இடங்களில் கலவரங்களும், குண்டு வீச்சுகளும், துப்பாக்கிச் சூடுகளும் நடந்தேறின; போக்குவரத்துகள் முடங்கின.
மே 4-ஆம் தேதி மணியாச்சி அருகே இளவேலங்கால் கிராமத்தில் நடந்த இரயில் மறியல் போராட்டம் தமிழகம் மட்டுமின்றி இந்திய நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது.
ஆம்! தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் அன்றைய தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் சகோதரர் இளவேலங்கால் கருப்பசாமி அவர்கள், தமிழக முதல்வர், காவல்துறை, இரயில்வே துறை என அனைவருக்கும் முறையாக தந்தி அனுப்பிவிட்டு, ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒருங்கிணைத்து, பெண்கள், குழந்தைகள், தாய்மார்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என 4000-க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல மக்களைத் திரட்டி இளவேலங்கால் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
காலை 7.30 மணிக்கு வந்த கன்னியாகுமரி விரைவு இரயிலை மறித்தனர்; இரயில் ஓட்டுனர் மற்றும் அதிகாரிகளை சிறைபிடித்தனர்; நம்முடைய போராட்டத்தால் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அந்த இடத்திலேயே உணவு சமைத்து பயணிகளுக்கு வழங்கினர்; குழந்தைகளுக்கு பால், முதயவர்களுக்கு பிஸ்கட், குடிநீர் என பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் போராட்டம் நடத்திய தேவேந்திரகுல மக்களே ஏற்படுத்திக் கொடுத்தனர்.
நாம் நம்முடைய தலைவரின் விடுதலைக்காகப் போராடுகிறோம்; நம்மால் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, பயணிகளுக்கு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்தனர்.
போராட்டக் களத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முத்துக்குமாரசாமி, டி.ஐ.ஜி. அப்பாத்துரை, ஏ.டி.எஸ்.பி., துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பல மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின்,
“இன்று ஞாயிற்றுக்கிழமை, எனவே எங்களால் ஒன்றும் பண்ண முடியாது; நாளை உறுதியாக தலைவர் விடுதலை செய்யப்படுவார்; அதற்கு நாங்கள் பொறுப்பு” என்று எழுத்துப் பூர்வமாக உறுதியளித்ததால், 6 மணிநேர இரயில் மறியல் போராட்டம் பிற்பகல் 1.10 மணிக்கு முடிவுக்கு வந்தது.
இரயில் 2 மணிக்கு நெல்லை சந்திப்பு நிலையம் சென்றவுடன், பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த பயணிகள், “இதுவரை இதுபோன்ற கண்ணியமிக்க போராட்டத்தை நாங்கள் பார்த்ததில்லை; போராட்டக்காரர்கள் எங்களை தங்கள் உறவினர்களைப் போல நடத்தினர்” என்று போராட்டக்காரர்களைப் பாராட்டினர்.
6 மணிநேர மறியல் போராட்டத்தால் அன்றைக்கு தென்மாவட்டங்களில் இயங்கும் அனைத்து இரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இந்நிகழ்வு தமிழக அரசை மட்டுமின்றி மத்திய அரசையே சற்று திரும்பிப் பார்க்க வைத்தது.
தென்மாவட்டங்கள் முழுக்க நடந்த தொடர் சாலை மறியல் போராட்டங்கள், துப்பாக்கிச் சூடுகள், கலவரங்கள், இரயில் மறிப்பு, பேருந்துகள் சிறைப்பிடிப்பு, மதுரை, நெல்லை, திருச்சி மத்திய சிறைகள் நிரம்பும் அளவிற்கு ஆயிரக்கணக்கான கைதுகள் என போராட்டம் வீரியமடைய, 3-ஆம் தேதி திருச்சி சிறையில் அடைக்கப்படிருந்த டாக்டர் அய்யா அவர்களை, 4-ஆம் தேதி வேலூர் சிறைக்கு மாற்றினர்.
ஆனால், தென்தமிழகம் முழுக்க போராட்டங்கள் தொடர்ந்தன; பேருந்து மற்றும் இரயில் போக்குவரத்து மட்டுமின்றி, சென்னை விமான நிலையத்தில் திரிசூலம், பல்லாவரம் பகுதி தேவேந்திரகுல மக்கள் சற்றே வித்தியாசமாக நடத்திய போராட்டத்தால் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
மே 5-ஆம் தேதி காலை தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் அருகே மற்றொரு இரயில் மறிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், துறையூரில் மாபெரும் சாலை மறியல் போராட்டத்திற்கு திட்டமிடப்பட்டு, நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து தேவேந்திரகுல மக்கள் துறையூர் நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில்,
காலை 11 மணியளவில் துவக்கத்தில் அமைதியாகக் கூடியிருந்த சிறிய கூட்டத்தை நோக்கி, எந்தவித காரணமுமின்றி ஜாங்கிட் தலைமையிலான காவல்துறையினர் திடீரென தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துறையூரைப் பூர்வீகமாகக் கொண்டு, அந்தப் பகுதியில் தேவேந்திரகுல மக்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் உடனடியாக களத்திற்குச் சென்று போராடக்கூடிய 26 வயது இளைஞர், டாக்டர் அய்யா அவர்களின் தலைமையை ஏற்று, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் ஆற்றல்மிகு செயல்வீரராகப் பணியாற்றிய மாவீரர் பிலிப்ஸ் அவர்கள் அன்றைய நெல்லை எஸ்.பி. ஜாங்கிட்டால் குறிவைத்து சுடப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர்; மாவீரர் பிலிப்ஸ் தன் தலைவர் விடுதலைக்காக தன் இன்னுயிரை நீத்தார்.
பின் கங்கைகொண்டான் அருகே சென்ற காவலர்கள் பேருந்துகளுக்கு அவர்களே தீவைத்தனர்; அதற்குள் துறையூரில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள், நண்பகல் 1 மணியளவில் டாக்டர் அய்யா அவர்களை விடுதலை செய்யக் கோரியும், மாவீரர் பிலிப்ஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையைக் கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த காவல்துறை போராட்டம் நடத்தியவர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தா கிராமத்தைச் சேர்ந்த மாவீரர் சண்முகம் களப்பலியானார்.
தன் சமூகத்தின் சமரசமற்றத் தலைவரின் விடுதலைக்கான போர்க்களத்தில் மாவீரர்கள் துறையூர் பிலிப்ஸ் மற்றும் ஆலந்தா சண்முகம் ஆகிய இரண்டு களப் போராளிகள் இம்மண்ணில் விதைக்கப்பட்டனர்.
துறையூர் துப்பாக்கிச் சூட்டின் எதிரொலியாக, தாழையூத்து வழியாக திருப்பி விடப்பட்ட கர்நாடக அரசின் பேருந்து உட்பட அனைத்துப் பேருந்துகளையும், தென்கலம், நாஞ்சான்குளம், வெங்கலப்பொட்டல் கிராமங்களைச் சேர்ந்த தேவேந்திரகுல மக்கள் சிறைப்பிடித்ததால் பிரச்சினை இரு மாநில அரசுகள் வரை சென்றது.
தடியடி, துப்பாக்கிச் சூடு, உயிரிழப்பு, குண்டு வீச்சு, பொய் வழக்கு, குண்டர் சட்டம், கைது, சிறையிலடைப்பு என காவல்துறை தனது அனைத்துவித அதிகாரங்களையும் ஆயுதங்களையும் பிரயோகித்தும் கூட, உண்மையான களப் போராளிகளான தேவேந்திரகுல மக்கள் தங்கள் போராட்டத்திலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை; போராட்டம் மேலும் மேலும் தீவிரமடைந்தது.
தமிழக டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி., பல மாவட்ட எஸ்.பி.க்கள், அமைச்சர்கள் குழு, மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், மனித உரிமை ஆணையம் என அனைத்து அரசு இயந்திரங்களும் தென்மாவட்டங்கள் நோக்கி படையெடுத்தன என்பதைக் காட்டிலும், தேவேந்திரகுல மக்கள் அரசு இயந்திரத்தை தங்களுடைய போராட்டத்தால் தென்தமிழகம் நோக்கி படையெடுக்க வைத்தனர் என்றே சொல்லலாம்.
ஊட்டிக்கு சுற்றுப்பயணம் செய்த முதலமைச்சரையே அவசர அவசரமாக சென்னை திரும்ப வைத்தனர் தேவேந்திரகுல மக்கள்.
இறுதியில், அரசு இயந்திரம் தேவேந்திரகுல மக்களின் தொடர் போராட்டத்திற்கு முன் பணிந்தது;
மே 5-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு, ஒட்டுமொத்த தேவேந்திரகுல மக்களின் ஒற்றைத் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு, கைது, சிறை என அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, தேவேந்திரகுல மக்கள் தொடர் சாலை மறியல், இரயில் மறியல், பேருந்து எரிப்பு, இரயில் உடைப்பு, விமான நிலையங்கள் முற்றுகை, வன்முறை, கலவரம் என தேவேந்திரகுல மக்கள் நடத்திய போராட்டங்களால் தென்தமிழக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருக்கலாம்; எம் மக்களை வன்முறையாளர் என்று கூட நினைத்திருக்கலாம்.
அவர்களுக்கெல்லாம் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறோம்!
டாக்டர் அய்யா அவர்களின் வருகைக்கு முன், தென்தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் அரசின் துணையோடு அன்றாடம் கட்டவிழ்த்து விடப்பட்ட சாதிய அத்துமீறல்கள், ஆதிக்கங்கள், கொள்ளைகள், தீவைப்புகள், கற்பழிப்புகள், கொலைகள் என அனைத்து சமூகக் கொடுமைகளிலிருந்தும் அனைத்து சமூக மக்களும் விடுவிக்கப்பட்டு, இப்போது கலவரமில்லா தென்தமிழகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதற்குக் காரணம் டாக்டர் அய்யா அவர்களும், அவரின் திருப்பித் தாக்கு தத்துவமும், அத்தத்துவத்தை செவ்வனே நிறைவேற்றிய தேவேந்திரகுல மக்களும் தான்.
அன்றைக்கு தேவேந்திரகுல மக்கள் வன்முறைக்கு வன்முறையை தீர்ப்பெழுதியதால் தான் இன்று தென்தமிழகம் அமைதியாக வாழ்கிறது.
அத்தகைய முழு அமைதியை தென்தமிழகத்தில் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அதனை தொடர்ந்து நிலைநாட்டிக் கொடுத்த பெருமை டாக்டர் அய்யா அவர்களையேச் சாரும்.
தலைவரின் கண்ணசைவை புரிந்து கொள்ளும் சமூகமும், சமூகத்தின் அசைவுகளைப் புரிந்து கொள்ளும் தலைமையும் உண்டென்றால் அது தேவேந்திரகுல மக்களும், டாக்டர் அய்யா அவர்களும் தான்.
தேவேந்திரகுல மக்களைத் தன் தாயைப் போல நேசித்து பண்படுத்தி, அவர்களுக்காக போராடி வரும் தன்மானத் தலைவர் டாக்டர் அய்யா அவர்களை, தேவேந்திரகுல மக்களும் தன் தலைவராக மட்டுமின்றி தாயாக நேசித்ததன் விளைவே, ஒரு சிறையில் ஒரு தலைவரை 24 மணி நேரம் கூட வைக்க முடியாமல் விடுதலை செய்த வரலாற்றுச் சாதனை.
அப்படி, தாயாக நேசித்ததால் தானோ என்னவோ, தலைவர் டாக்டர் அய்யா அவர்களுக்காக தேவேந்திரகுல மக்கள் நடத்திய போராட்டங்களிலும், தேவேந்திரகுல மக்களுக்காக தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் நடத்திய போராட்டங்களிலும் தேவேந்திரகுல தாய்மார்களே முன்னணி வீரர்களாக நின்றனர்.
அப்படிப்பட்ட தன் தாயுமானவரான தலைவர் டாக்டர் அய்யா அவர்களுக்காக களப்போர் கண்டு களப்பலி கண்ட மாவீரர்கள் துறையூர் பிலிப்ஸ் மற்றும் ஆலந்தா சண்முகம்
மாவீரர்கள் இருவருக்கும் நமது செம்மாந் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்!!
