வெள்ள நிவாரண பணியில் ஈடுபட, புதிய தமிழகம் கட்சியினருக்கு தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் வேண்டுகோள்.!

செய்திகள்
s2 289 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 10 Nov 2021

Loading

தமிழகமெங்கும் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பருவமழை மிக அதிக அளவில் பெய்து வருகிறது. குறிப்பாக,சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த நான்கு தினங்களாக பெய்துவரும் பலத்த மழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கிப் போயுள்ளது.சென்னை நகரின் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதக்கிறது.பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்து குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் குளங்களாக காட்சியளித்து, மக்கள் வீட்டை விட்டே வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.இந்த நிலையில் இன்னும் சில தினங்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிட வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

எனவே, புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் தங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு,உடை, தங்குமிடம்,மருந்துகள், குடிநீர்,பால் பொருட்கள் உள்ளிட்ட தேவைப்படும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தங்களது பகுதியில் தாங்கள் செய்யும் நிவாரண பணிகளை அவ்வப்போது தலைமைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
நன்றி.

– தலைமை நிலையம்,
புதிய தமிழகம் கட்சி.
10.11.2021