மாஞ்சோலை வழக்கு விசாரணை – மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் நேரில் ஆஜர்.!
செய்திகள்
478 Views
Published:
14 Aug 2024
![]()
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமையை காக்க – தலா 10 ஏக்கர் நிலம் வழங்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த வழக்கு இன்று (14-08-2024) 46 வது வழக்காக Court No -1 ல் முறையாக விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே இந்த வழக்கில் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் மனு தாரராக மட்டுமின்றி, நேரடியாக ஆஜராகி வாதாடி வருகிறார்கள். இன்று ஐந்தாவது முறையாக மீண்டும் விசாரணைக்கு வந்தது; அரசு மற்றும் எதிர் தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று வருகிற 29.08.2024 ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
– தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி.
14.08.2024






