நெல்லைப் பேரணி, ஆர்ப்பாட்டம் – நவம்பர் 19-ஆம் தேதிக்கு மாற்றம்!

செய்திகள்
s2 291 Views
  • Dr Krishnasamy 2
  • Dr Krishnasamy 2
Published: 10 Nov 2023

Loading

அண்மைக்காலமாக, தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு எதிராக நடைபெறும் தொடர் வன்கொடுமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து, நவம்பர் 18-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நெல்லையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்திருந்தோம். அன்றைய தினம் நாம் பெரிதும் மதிக்கும் சுதந்திரப் போராட்டக் தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய நினைவு நாள் மற்றும் திருச்செந்தூர் சூரசம்காரம் ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு, அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று, பேரணியும் ஆர்ப்பாட்டமும் நவம்பர் 18 ஆம் தேதிக்குப் பதிலாக, நவம்பர் 19-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), சரியாகக் காலை 11 மணிக்கு நடைபெறும். எனவே நம்முடைய புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் நெல்லையில் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் பேரணி – ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ளத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.11.2023