தமிழக அரசியல் வரலாற்றில் தேவேந்திர குல வேளாளர் மக்களை அரசியல் சக்தியாக வெகுண்டெழ வைத்த புதிய தமிழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு.
![]()
புதிய தமிழகம் மாநில மாநாட்டை சீர்குலைக்க சதி:
ராமநாதபுரத்தில் , புதிய தமிழகம் சனிக்கிழமை நடத்தவுள்ள மாநில மாநாட்டையும் பேரணியையும் சீர்குலைக்கும் நோக்கத்தோடு , பிற்போக்கு சக் திகள் பரப்பும் வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம் என்று இக் கட்சியின் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி. கேட்டுக்கொண்டார் . ராமநாதபுரத்தில் புதன்கி ழமை அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது:
புதிய தமிழகத்தின் மாநில மாநாட்டிலும் , பேரணியிலும் லட்சக்கணக்கானோர் பங்கேற்கவுள்ளனர் . இதற்கான ஏற்பா டுகளைக் கண்டு , சில அரசியல் கட்சிகள் பொறாமைப்படுகின் றன . அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாட்டில் தொண்டர்கள் கலந்துகொள்வது மட்டும் வழக்கம் . ஆனால் புதிய தமிழகத்தின் மாநாட்டிலும் பேரணி யிலும் , இதுவரை வஞ்சிக்கப் பட்ட மக்கள் தாமாக முன் வந்து கலந்துகொள்கிறார்கள் . மாநாட்டுக்கு வருவோரை திசை திருப்பவும் , மாநாட்டை சீர்குலைக்காயும் பிற்போக்கு சக்திகள் வதந்திகளை பரப்புகின்றன . இதை யாரும் நம்ப வேண்டாம் புதிய தமிழகத்தின் பேரணியைக் கட்டுப்படுத்தவும் மாநாட்டை ஒழுங்குபடுத்தவும் காவல்துறையைத் தவிர , 5000 தொண்டர்படையினர் . ஈடுத்தப்படுவர் பேரணியும் மாநாடும் முழு அமைதியாக நடைபெற்று புதிய வரலாற்றைப் படைக்கும் . என்றார் கிருஷ்ணசாமி . பேட்டியில் போது , மாநில மாநாட்டு அமைப்பாளர்கள் எம்.எம்.கே. இப்ராகிம் , நசிரா பர்வின் , மாவட்ட அமைப்பா ளர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர் . வியாழக்கிழமை பேசிய மதுரையில் பேட்டி மதுரையில் செய்தியாளர்களுடன் கிருஷ்ணசாமி கூறியதாவது : இந்த மாதாட்டில் கிறிஸ்த வர்கள் , இஸ்லாமியர் கலந்து கொள்ளவுள்ளனர் . மாநாட்டிற்காக தொண்டர் கள் வருவதைத் தடுக்கும் வகை யில் மாநாட்டிற்கு வரும் வாகனங்களை காவல்துறையினர் தடைசெய்கின்றனர் . இது கண்டிக்கத்தக்கது . பிற அமைப்பின் நிர்பந்தங்கனனால் தமிழக அரசின் ஆதிதிரா விட நலத்துறைச் செயலராக இருந்த கிருஸ்த்துதாஸ் காந்தி பணி இடமாற்றம் செய்ததும் கண்டனத்துக்குரியது . சாத்தூரில் நடைபெற்ற கல வாரத்திற்கு காவல்துறையின் பொறுப்பின்மைதான் காரணம் இந்தச் சம்பவத்திற்கு வேறு அரசியல் கட்சிகளும் பின்னணியில் இருந்திருக்கக்கூடும் புதிய தமிழகம் கட்சியின் வளர்ச்சியை தமிழகத்தின் உள்ள பல அரசியல் கட்சிக ளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றார் கிருஷ்ணசாமி இமானுவேல் சமாதியில் இன்று அஞ்சலி இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு , பரமக்குடியில் உள்ள அவரது சமாதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தேவேந்திரகுல வேளாளர் சங் கத்தின் மாநிலத் தலைவர் . ஜான் பாண்டியன் ஆகியோர் வெள்ளிக்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்து கின்றனர் . பரமக்குடியில் , அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே , இமானுவேல் சேகரனின் சமாதி உள்ளது . இவர்கள் வருகையை முன்னிட்டு பரமக்குடியில் பலந்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
முதல் மாநில மாநாடு
புதிய தமிழகம் கட்சியின் மாநில 2 நாள் மாநாடு ராமநாத புரத்தில் செப்டம்பர் 11 ல் தொடங்கியது நகர எல்லையில் மதுரை ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடந் தன. மாலையில் நடந்த மாநாடு தொடக்க விழாவில் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார் கட்சியின் பொதுச்செயலா ளர் துரையரசன் தலைமை தாங்கினார் . அமைப்பு குழு தலைவர் எம்.எம்.கே.முகமது இப்ராகிம் வரவேற்று பேசினார் தலைமை நிலைய செயலாளர் நடராஜன் , மாவட்ட தலைவர் கதிரேசன் , அமைப்பாளர் சுரேஷ் , டாக்டர் நசீரா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித் தனர் . சென்னை செல்வம் , லட்சுமி , சண்முகம் , பேராசிரியர் கேசவன் , கவிஞர் இன்குலாப் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகி கலந்து களும் மாநாட்டில் கொண்டனர் .
மாநாட்டையொட்டி ஊழியர் கூட்டம் , கலை நிகழ்ச்சிகள் நடந் தன . மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலிருந்து பல பகுதிகளிலி ருந்தும் தொண்டர்கள் வந்திருந்தனர். மாநாட்டின் 2 வது நாள் பேரணி மற்றும் மாநாட்டு நிகழ்ச் சிகள் நடந்தன
இமானுவேல் சேகரனுக்கு அரசு விழா:
தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்த இமானுவேல் சேகரனுக்கு அரசு விழா எடுக்க வேண்டும் என்று புதிய தமிழ்கம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்தார் ராமநாதபுரம் பரமக்குடி அருகே செல்லூர் ரில் , கிராமப் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை நடத்திய இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவில் பேசியதாவது இமானுவேல் சேகரன் 41 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமை போரில் உயிர்நித்தார் இந்தியாவில் தீண்டாமையை ஒழிக்க முதல் குரல் கொடுத்த அவருக்கு சிலை அமைக்க அரசு தவறி தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடிய இமானுவேல் சேகரனுக்கு இதுவரை மணிமண்டபம் கட்ட எந்த அரசும் முன்வ ரவில்லை தாழ்த்தப்பட்டவருக்காகப்போராடி உயிர் நீத்த இமானுவேல் சேகரனுக்கு விழா எடுக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி செல்லூர் கிராம மக்கள் சார்பில் நடந்த இந்த விழாவில் பரமக்குடி சட்டப்பே ரவை உறுப்பினர் திசைவீரன் ( திமுக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சுந்தரராஜன் பாலுசாமி மற்றும் பலர் பேசினர் . இமானுவேல்சேகரனின் மகள் விஜயராணி தலைமை வகித்தார் முன்னதாக இக்கிராமத்தில் இமானுவேல் சேகரனின் சிலை யுடன் கூடிய மணிமண்டபம் கட்டுவதற்காக அடிக்கல்லை கிருஷ்ணசாமி நாட்டினார் .செல்லூர் செல்வதற்கு முன்பாக பரமக்குடியிலுள்ள இமா னுவேல் சேகரனின் சமாதியில் மலர் வளையம் வைத்து கிருஷ் ணசாமி அஞ்சலி செலுத்தினார் இமானுவேல்சேகரனின் பேத்தி ரூபா , தேவேந்திர வேளாளர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரபோஸ் , பாமக ராஜ்குமார் ஆகியோர் தனித்தனியாக சமாதியில் அஞ்சலி செலுத்தினர் . செல்லூருக்கு , ரகுபதி தலைமையிலான தேவேந்திர குல சங்கத்தினர் நினைவு ஜோதியை எடுத்துச் சென்றனர்.
2001 – ம் ஆண்டில் தமிழகத்தில் அம்பேத்கர் ஆட்சி அமைப்போம்:
2001 – ம் ஆண்டில் தமிழகத்தில் அம்பேத்கர் ஆட்சி அமைப்போம் என்று புதிய தமிழகம் மாநாட்டில் பேசிய கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறினார் ராமநாதபுரத்தில் புதிய தமிழகம் கட்சியின் முதல் மாநாடு நேற்று நடந்தது . மாநாட்டை தொடங்கி வைத்து அதன் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேசியதாவது ராமநாதபுரத்தில் முதலாவது மாநாடு நடைபெறும் என்று அறி வித்த பிறகு எத்தனையோ தடைகள் குறுக்கீடுகள் , தொல்லைகள் பலராலும் சமுதாயத்தின் பெய ரைச் சொல்லி வளாந்தவர்களும் உயர்ந்தவர்களும் மாநாட்டை விரும்பவில்லை . மதவெறி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழகத்தில் அம்பேத்கர் ஆட்சியை அமைக்கவும் கட்சி அமைப்பை எப்படிச் சிறப்பாக நடந்துவது என்பது பற்றிய 3 உயர்ந்த நோக் கங்களுக்காக இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது அரசியல்வாதிகளிடம் அடி மைப்பட்டுக்கிடக்கும் தாழ்த் தப்பட்டோரை அரசு எந்திரம்நசுக்குகிறது . இதிலிருந்து விடுவித் துக்கொள்ள அம்பேத்கர் ஆட் சியை தமிழகத்தில் அமைப்பது அவசியம் . தீண்டாமையை ஒழிக்கும் போராட்டத்தில் இறங்கிய இமானுவேல் சேகரன் கொல்லப் பட்டதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகவே தான் முதலாவது மாநில மாநாடு நடத்த புதிய தமிழகம் ” ராமநாதபுரத்தை தேர்ந் தெடுத்தது . தீண்டாமையை ஒழிக்க தி.மு.க. அதிமு.க காங் கிரஸ் , கட்சிகள் எதுவும் செய்ய வில்லை தாழ்த்தப்பட்ட மக்களின் வெற்றிக்கு முன்னேற்றத்திற்கு திமுகவும் அதிமுகவும் தடை யாக உள்ளன . இவ்வாறு பேசினார்
கச்சத்தீவை மீட்க வேண்டும்; புதிய தமிழகம் மாநாட்டில் தீர்மானம்:
ராமநாதபுரம் செப் 11 கச்சத்தீவை மீட்க வேண் டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மாநில மாநாடு புதிய தமிழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு ராமநாதபுரத்தில் நடைபெற்றது மாநாட்டின் 2 நாள் நிகழ்ச்சிக்கு அந்த கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார் மாநாட்டு அமைப்பாளர் கீழக்கரை எம்.எம்.கே.முகமதுஇபுராகிம் முன்னிலை வகித்தார் வக்கில் பிவி பக்தவச்சலம் அஜிதா கவிஞரின் குலாப் பேராசிரியர் சரஸ்வதி . பாலபிரஜாபதி அடிகள் விடுதலை ராஜேந்திரன் , டி.எஸ் .மணி மாவட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் கதிரேசன் மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் , அம்பேத்கார் மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவர் சென்னை செல்வம் உள்பட ஏராளமானோ பேசினார்கள் இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்த பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நெல்லை மாஞ்சோலை தொழிலாளர் பிரச்சனையில் தவறாக நடந்து கொண்ட அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேலை நீக்கம் செய்ய வேண்டும் இதன் தொடர்பாக நெல்லையில் அவரின் கொடும் பாவி எரிக்கப்படும் அங்கு நடந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் இந்தக் கோரிக்கை வலியுறுத்தி இந்த மாதம் 27ஆம் தேதி மதுரையிலிருந்து நெல்லை வரை நடைப்பயணம் போராட்டம் நடத்தப்படும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் கடந்த 5 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் தொடரப்பட்ட வழக்குகளைஅரசு வாபஸ் பெற வேண்டும் கண்டதேவி மேலவளவு கோவில்பட்டி உட்பட எல்லா ஊர்களிலும் ஆலயங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் கொடியங்குளம் சிபிஐ விசாரணை அறிக்கை வெளியிட வேண்டும் துப்புரவு பணிக்கு தாழ்த்தப்பட்டவர்கள் மலை ஜாதியினரை நியமிக்க வேண்டும் ஓய்வூதியம் தீண்டாமை எதிர்த்து போராடிய சமூக நீதி காவலர் இமானுவேல் சேகரன் உள்பட 7 அங்கீகரித்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்துப்பாக்கி 1989 வருட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மலை ஜாதியின் அவர்களுக்கும் அவர்களின் பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் அரசு வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் தியாகி இமானுவேல் சேகரனுக்கு சென்னையில் சிலை அமைத்து அவர் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் கச்சத்தீவை மீட்க பிடிக்கப்பட்ட பாபர் மசூதியே மீண்டும் கட்ட வேண்டும் கச்சத்தீவை மீட்க வேண்டும் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் கோவை குண்டுவெடிப்பு காரணம்காட்டி முஸ்லிம்களை கொடுமைப்படுத்த கூடாது தஞ்சை திருவாரூர் நாகை உள்ள மாவட்டங்களுக்கு சொந்தமான சொத்துக்களை அரசு கையாளப்படுத்தி தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் தேவஸ்தான சிவகங்கை ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குட்பட்ட தேவஸ்தானங்களை இந்து அறநிலைத்துறையோடு சேர்க்க வேண்டும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் ராமேஸ்வரம் திருச்சி இடையே அகால ரயில் பாதை போட வேண்டும் ஒவ்வொரு ஊர்களிலும் பாதுகாப்பு படை அமைக்க வேண்டும் மேற்கண்ட தீர்மானங்க ள் உட்பட மொத்தம் 60 தீர்மானங்கள் நிறைவேற்றின இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட தலைவர் கதிரேசன் அமைப்பாளர் சுரேஷ் கீழக்கரை எம் எம் கே.இபுராகீம் கீழக்கரை நசீராபர் வின் உள்பட பலர் செய்திருந்தார் சிறுவன் சாவு ராமநாதபுரத்தில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள சிலர் ராஜபாளையத்தில் இருந்து வேனில் வந்தார்கள் இவர்கள் ராமேஸ்வரத்தை சுற்றிப் பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து சென்றார்கள் மண்டபம் அருகே உள்ள வேதாளம் கிராமத்தைச் சேர்ந்த நாயின முகமது என்பவரின் மகன் சிறுவன் மலிக் மீது அந்தவன் மோதியது சிறுவன் அந்த இடத்தில் துடித்து துடித்து செத்துப் போனான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வேன் டிரைவர் சுரேஷ் கைது செய்தனர்
போலீஸ் குவிப்பு:
ராமநாதபு ரத்தில் 2 நாள் புதிய தமிழகம் முதல் மாநில மாநாடு நடப்பதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது . தென் மண்டல ஐ.ஜி. மனோகரன் தலைமையில் டி.ஐ.ஜி.கள் , 4 எஸ்.பி.கள் மற்றும் டி.எஸ்.பி.கள் . இன்ஸ்பெக்டர்கள் , இன்ஸ்பெக்டர்கள் , பெண் போலீசார் உட்பட சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.