சித்திரை திருநாள் – சோபகிருது – தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு நல்வாழ்த்துகள்!!

செய்திகள்
s2 452 Views
  • Dr Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr Krishnasamy
Published: 14 Apr 2023

Loading

சுபகிருது நிறைவுற்று சோபகிருது எனும் தமிழ் புத்தாண்டின் துவக்கமாம் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகளை தமிழகத்திலும், பாரத தேசத்திலும், உலகெங்கும் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போன்று விஷூ என்ற பெயரில் புத்தாண்டை கொண்டாடும் கேரள மக்களுக்கும் என்னுடைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தமிழ் புத்தாண்டில் தமிழ் மக்கள் நல்ல உடல் நலத்துடனும் இயற்கை, தொழில், வணிகம், கல்வி உட்பட அனைத்து வளங்களும் பெருகி மனமகிழ்வுடன் வாழவும், மது, போதை, புகை உள்ளிட்ட கொடிய பழக்கவழக்கத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுபடவும் ஊழலற்ற, சமூக, அரசியல் பொருளாதார பேதங்களற்ற தமிழ் சமுதாயம் மலரவும் வாழ்த்துகிறேன்.

 

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex MLA.,
நிறுவனர் & தலைவர்,

புதிய தமிழகம் கட்சி,.
14.04.2023.