டாக்டர் கிருஷ்ணசாமி பிறந்த நாள் விழா! மது, போதை, புகை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!

செய்திகள்
s2 346 Views
  • டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா

    டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா

  • டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா
Published: 06 Apr 2023

Loading

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex MLA அவர்களின் பிறந்த நாள் விழா
மற்றும்
மது, போதை, புகை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு – ஏப்ரல் 3, 2023

ஒரு நாட்டின் வளர்ச்சியை வானுயர்ந்த கட்டிடங்களாலும், அகன்ற – நீண்ட சாலைகளாலும், சொகுசு வாகனங்களாலும் மட்டுமே அளவீடு செய்யப்படக் கூடாது. தனி மனிதன் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் அரசியல், பொருளாதார, மனிதவள மேம்பாடு ஆகியவற்றை கணக்கில் கொண்டே அளவீடு செய்யப்பட வேண்டும். புறத்தோற்றத்திற்கு தமிழ் சமுதாயம் வளர்ச்சி பெற்றது போன்று தோன்றினாலும், உள்ளடக்கத்தில் மது, போதை, புகை ஆகிய பழக்கவழக்கங்களுக்கு ஆட்பட்டு மிகப்பெரிய சீரழிவை நோக்கிச் செல்கிறது. குறிப்பிட்ட வயதை கடந்த ஒரு சிலரிடத்தில் மட்டும் இருந்த இதுபோன்ற பழக்கவழக்கங்கள் கல்லூரி, பள்ளி வாயில்கள் வரை பரவி ஒட்டுமொத்த சமுதாயத்திலும் வியாபித்து இருக்கிறது.

இக்கொடிய மது, புகை, போதை பழக்கவழக்கங்களுக்கு ஆட்பட்டவர்களுடைய உடல்நலம் சீரழிவதோடு, அவர்கள் சமூகத்தில் சிந்திக்க மற்றும் செயல்பட திறனற்றவர்களாக மாறி சமூகத்திற்கு பெரும் சுமையாக மாறுகிறார்கள்.

டாஸ்மாக்கில் துவங்கி இப்பொழுது கஞ்சா விற்பனை வரையிலும் பட்டிதொட்டி எல்லாம் பரவி விட்டது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டார்கள்.
இப்பாரத தேசத்தின் மீதும் தமிழக மக்கள் மீதும் தீரா பற்றுக் கொண்டுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலின்படி, கடந்த 25 வருடத்தில் போதை பழக்கவழக்கங்களை ஒழிக்க எண்ணற்ற பல போராட்டங்களை புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்துள்ளது.

1947-க்கு பிறகு முன்பு, அந்திய ஆதிக்கங்களின் இருந்து விடுவிக்க நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தைப் போல மது, போதை வஸ்துக்களின் பிடியிலிருந்து விடுவிக்க இன்னொரு சுதந்திரப் போராட்டத்தைத் துவங்க வேண்டிய அவசியம் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புரையோடிக் கிடந்த எத்தனையோ சமூக கொடுமைகளுக்கு எதிராகப் போராடி அதிலிருந்து அவர்களுக்கு ஒரு விடுதலையை உருவாக்கித் தந்தவர் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள். இப்பொழுது ஏற்பட்டிருக்கக்கூடிய புதுவித அடிமைத்தனத்திலிருந்தும் தமிழகத்தை தலைவர் டாக்டர் அய்யா அவர்களால் தான் விடுவிக்க முடியும்.

மது, போதை, புகை வஸ்துக்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தை தலைவர் அவர்களின் பிறந்த நாளான இன்று 03.04.2023 முதல் ஒரு மகத்தான மக்கள் இயக்கத்தை முன்னெடுப்பது என்றும்; அவ்வியக்கத்தை முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமை புதிய தமிழகம் கட்சி தொண்டர்களுக்கு இருப்பதால் “Charity begins at home” என்ற வாக்கியத்திற்கு ஏற்ப புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் மற்றும் தமிழக இளைஞர்களும் எந்த ஒரு சூழ்நிலையிலும் மது, போதை, புகை உள்ளிட்ட எவ்வித பழக்க வழக்கங்களுக்கும் ஆட்பட மாட்டோம் எனவும்; தினமும் ஒருவரையாவது இப்பழக்க வழக்கத்திலிருந்து விடுவிக்க முயற்சி எடுப்போம் எனவும்; மது, போதை, புகையிலை இல்லா தமிழகத்தை உருவாக்க தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வோம் என்றும் உறுதி ஏற்கிறோம்.