18 வயதில் இமாலய சாதனை.! பிரக்ஞானந்தா வெற்றியை இழந்திருந்தாலும், அது தோல்வி அல்ல; வெற்றியே.!

அறிக்கைகள்
s2 456 Views
  • பிரக்ஞானந்தா

    பிரக்ஞானந்தா வெற்றியை இழந்திருந்தாலும், அது தோல்வி அல்ல; வெற்றியே.!

  • பிரக்ஞானந்தா
Published: 25 Aug 2023

Loading

FIDE என்று அழைக்கப்படும் உலக செஸ் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

எனினும் வயதிலும், அனுபவத்திலும் மூத்த; ஏற்கனவே உலக அளவில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள நார்வே வீரர் கார்ல்சனை முதல் இரண்டு போட்டிகளிலும் சமன் செய்ததே மிகப் பெரிய சாதனை; இறுதியாக வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வேக நகர்த்துதலில் ஒன்றில் வெற்றியையும், இன்னொன்றை சமன் செய்தும் காரல்சன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார். பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

மிக குறைந்த வயதில் பல ஜாம்பவான்களை எளிதாகத் தோற்கடித்து இறுதிப் போட்டியில், உலக தரவரிசையில் உள்ள ஒரு வீரரைச் சந்திக்கும் அளவிற்கு உயர்ந்ததே வரலாற்றுச் சாதனை; அவரை வாழ்த்துகிறோம்.!

பிறந்த மண்ணிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தில் நடந்த போட்டியில் கைகுலுக்கவோ, வாழ்த்து சொல்லவோ, ஆரவாரம் செய்யவோ எவரும் இல்லாத நிலையிலும் கூட தனது தன்னம்பிக்கை மற்றும் அறிவு பலம் ஆகியவற்றை மட்டுமே கொண்டு இந்த உச்ச நிலையை அடைந்து அவருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் அவர் பெருமை சேர்த்து இருக்கிறார்.

உழைப்பும் உறுதிப்பாடும் இருந்தால் தான் எண்ணும் உயரத்தை எளிதாக எட்டி விடலாம் என்பதை இன்றைய பள்ளி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு பாடமாக உணர்த்தியிருக்கிறார்.

அவர் விரைவில் உலக செஸ் சாம்பியன்ஸ் பட்டத்தை வெல்வது மட்டுமல்ல, உலக செஸ் போட்டிகளில் பலகாலம் அவர் ஆதிக்கம் செலுத்தவும் வாழ்த்துகிறோம்.

அவர் தோல்வியுறவில்லை; அவர் வெற்றி தான் பெற்று இருக்கிறார். அவருக்கு ஒட்டுமொத்த பாரத தேச மக்களின் சார்பாக நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, ExMLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
25.08.2023