தியாகி இமானுவேல் சேகரனாருக்கு புகழ் வணக்கம்!
புதிய தமிழகம் கட்சியினர் பேரெழுச்சியோடு டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் பேரணியாக சென்று தியாகி இமானுவேல் சேகரனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.

1992 ஆம் ஆண்டு தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை கண்டுபிடிக்கப்பட்டபோது அந்த இடமானது முட்புதர்கள் மண்டி கிடந்தது மேலும் குப்பை கொட்டுகின்ற, மலஜலம் கழிக்கின்ற ஒரு இடமாக இருந்தது. அப்படிப்பட்ட இடத்தை புதிய தமிழகம் பொறுப்பாளர்கள் சுத்தம் செய்து தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பை கட்டியமைத்த டாக்டர் அய்யா அவர்கள் முதன்முறையாக ஆறு வாகனங்களில் வருகை புரிந்து தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினார் .
1997 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் நாள் தமிழக அரசியல் வரலாற்றிலும் சரி இந்திய அரசியல் வரலாற்றிலும் சரி உலக அரசியல் வரலாற்றிலும் சரி பொன்னெழுத்துக்களால் பொரிக்க கூடிய வகையில் புதிய தமிழகம் எனும் பேரியக்கத்தை டாக்டர் அய்யா அவர்கள் கட்டியமைத்தார்.
புதிய தமிழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை துவங்குவதற்கு முன்பாக நூற்றுக்கணக்கான வாகனங்களோடு சென்று தியாக சீலர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி விட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாள் மாநாடு நடத்திய பெருமை புதிய தமிழகம் கட்சிக்கு மட்டுமே சாரும். அதன் பிறகு தான் தியாகியாரின் புகழ் உலகறிய செய்யப்பட்டது.
இன்று பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடுகிறார்கள். அனைத்து அரசியல் கட்சியினர்களும் தவிர்க்க முடியாமல் வருகிறார்கள் .பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் அணிதிரண்டு வருகிறது. அதுவும் காவல்துறையின் அடக்குமுறைகளை மீறி சொந்த வாகனத்தில் தான் வர வேண்டும். அந்த வாகனத்தில் உரிமையாளர் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த வாகனத்திற்கும் முன் அனுமதி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலும் ,சம்பந்தப்பட்ட டிஎஸ்பி அலுவலகத்திடம் இருந்து அனுமதி பெற்று அந்த அனுமதி சீட்டை ஒட்டிக்கொண்டு தான் வரவேண்டும் . இதற்கிடையில் காவல்துறை புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளின் வீட்டிற்கு அடிக்கடி சென்று ஆதார் கொடு அதைக் கொடு இதைக் கொடு என தொந்தரவு செய்வது . இப்படி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் , அந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் தவிடு பொடியாக்கி, அந்த தடையை எல்லாம் உடைத்தெறிந்து தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்தனர்.
பேரணி தூங்குவதற்கு முன்பு சாலையில் இருபுறமும் பொதுமக்கள் தலைவர் அவர்களுக்கு எழுச்சிகரமான வரவேற்பு கொடுத்தார்கள். மணி நகரில் கட்சியின் சிவப்பு பச்சை வர்ண கொடியை ஏற்றி வைத்து பேரணி துவங்கப்பட்டது . பேரணியில்…
தலைவர் டாக்டர் அய்யா, இளம் தலைவர் டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி ஆகியோரின் புகைப்படம் பொறித்தும் ‘ மது இல்லாத புதிய தமிழகம் படைப்போம் ! எனும் வாசகத்தோடு பனியன் அணிந்து, ரெண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியை வழி நடத்தினார்கள். லட்சக்கணக்கானோர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
வீர வணக்கம் வீர வணக்கம்
தியாகியாருக்கு
புதிய தமிழகத்தின் வீர வணக்கம் !
வீண் போகது வீண் போகாது
நீங்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது !விழ விழ எழுவோம்
ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம் !
வருகுது பார் வருகுது பார்
பரமக்குடி வீதியிலே..
டாக்டர் அய்யா தலைமையிலே
சிவப்பு பச்சை கொடி ஏந்தி
புதிய தமிழகம் வருகுது பார்!
சிங்கக் கூட்டம் வருகிறது பார்! கொள்கை கூட்டம் வருகிறது பார் !இலட்சிய கூட்டம் வருகுது பார் !
புதிய தமிழகம் வருகுது பார்!
தமிழக அரசே ! மத்திய அரசே ! அறிவித்திடு அறிவித்திடு
தியாகியாரின் பிறந்தநாள் நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்திடு !
சேர்த்திடு சேர்த்திடு
தியாகியாரின் வாழ்க்கை வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்த்திடு!
சூட்டிடு சூட்டிடு
மதுரை விமான நிலையத்திற்கு தியாகியாரின் பெயரை சுட்டிடு
வாழ்க வாழ்க வாழ்கவே
டாக்டர் அய்யா வாழ்கவே
வெல்க வெல்க வெல்கமே
புதிய தமிழகம் வெல்கவே
வழி நடப்போம் வழி நடப்போம்
டாக்டர் அய்யா வழி நடப்போம்
வென்றெடுப்போம் வென்றெடுப்போம்
ஆட்சியதிகாரத்தை வென்றெடுப்போம்
விட்டொழிப்போம் விட்டொழிப்போம்
எஸ்சி பட்டியலை விட்டொழிப்போம் !
படைப்போம் படைப்போம்
மது இல்லாத
புதிய தமிழகத்தை படைப்போம் ! என பேரணியில் மண்ணதிர ,விண்ணதிர முழக்கம் இடப்பட்டது .
டாக்டர் அய்யா அவர்களின் அறை கூவலுக்கேற்ப புதிய தமிழகம் கட்சியினர்கள் பரமகுடியை திணற வைத்தனர்.
வாடகை வாகனத்திலும் வரலாம் எனும் நடைமுறை மட்டும் இருந்திருந்தால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து குவிந்து இருந்திருக்கும் . சொந்த வாகனங்களில் வந்தவர்களிடையே காவல்துறை வழக்கம் போல சிகப்பு பச்சை கொடியின் கீழும்,டாக்டர் அய்யா அவர்கள் தலைமையிலும் , புதிய தமிழகம் கட்சியின் கீழும் அணி திரள்வதை பொறுத்துக் கொள்ள முடியாத திராவிட மாடல் அரசு காவல்துறை மூலமாக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தனர் . தலைவர் டாக்டர் அய்யா அவர்களுக்கு சிறப்பு காண்வே அமைத்து தலைவர் டாக்டர் அய்யா அவர்களை தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு இடத்திற்கு அழைத்துச் செல்லாமல் தலைவரின் பின்னால் அணிவகுத்து வந்த பல்லாயிரக்கணக்கான வாகனங்களை எப்படி தடுத்து நிறுத்தலாம் என்றே சிந்தித்து கீழ்த்தரமாகவும், தீய எண்ணத்தோடுமே செயல்பட்டனர் . அவர்களுடைய போக்கு அருவருக்கத்தக்க வகையில் இருந்தது. இதை புதிய தமிழகம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
செப்டம்பர் 11 அன்று மட்டுமே முளைக்கின்ற திடீர் தலைவர்களும் திமுகவின் கைக்கூலியாக செயல்படுகின்ற சிறு, குறு அமைப்புகளும், தலைவருக்கு வேண்டுமென்றே வழி விடாமல் துரோகிகளும் ,சமுதாய விரோதிகளும் சில புல்லுருவிகளும் தங்களுடைய பங்கிற்கு சில இடையூறுகளை செய்தனர்.இருந்த போதிலும் புதிய தமிழகம் கட்சியினர்கள் கண்ணியமாக ராணுவ கட்டமைப்போடு பேரணியை துவங்கி இறுதிவரை சுமார் மதுரையில் இருந்து ஒன்றரை மணியளவில் புறப்பட்ட தலைவரின் பயணம் 8 மணி நேர பயணத்தோடு நினைவேந்தல் பேரணி நிறைவடைந்தது.
தமிழகமெங்கும் வந்திருந்த புதிய தமிழகம் கட்சியினர்களை தாயன்போடு வழி அனுப்பிவிட்டு தலைவர் அவர்கள் மதுரையில் வந்து தங்கினார் . தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்று தியாகியாரின் தியாகத்தை உலகறிய செய்த வரலாற்று சிறப்புமிக்க பேரணியை நிகழ்த்திக் காட்டிய அனைத்து புதிய தமிழகம் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் , பொதுமக்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.
வாழையூர் குணா