புதிய தமிழகம் கட்சியின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.!

செய்திகள்
s2 46 Views
  • Xmas
  • Xmas
Published: 24 Dec 2023

Loading

மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள்; அதைத்தொடர்ந்து, டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த மிக மிஞ்சிய மழையின் காரணமாக தென் தமிழகத்தினுடைய பெரும்பகுதி மக்கள் வெள்ளச் சேதங்களுக்கு ஆட்பட்டு, இன்னும் அதிலிருந்து முற்றாக மீண்டு வர முடியாமல் தத்தளித்து வருகின்றனர். எனவே, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா தமிழகத்தில் உள்ள அனைத்து கிறித்துவ மக்களுக்கும் ஒரே மாதிரியான மகிழ்ச்சியை உண்டாக்காது. எனினும், ஆண்டுக்கு ஒரு முறை கிறிஸ்தவ பெருமக்களால் கொண்டாடப்படக்கூடிய கிறிஸ்துமஸ் நன்னாளில் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
24.12.2023