மகளிர் தின வாழ்த்துச் செய்தி.!

உலக மகளிர் தினமான இன்று அனைத்து மகளிர்க்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர்க்கு அவர்களுக்கான உரிமைகளையும் சமத்துவத்தையும் வழங்குவதே மகளிர் தினத்தின் மிக முக்கியமான நோக்கமாகும். ஒரு பெண் இல்லாமல் எவரும் இந்த உலகத்தில் தோன்றி இருக்க முடியாது. இந்த மகத்துவத்துக்குரிய பெண்களில் பெரும்பாலோனோர் நல்ல கல்வியை அடையாததும், நல்லதொரு உயரத்தை எட்டாததும் வேதனைக்குரியது. கிராமங்களில் வாழக்கூடிய கோடான கோடி பெண்கள் நல்ல கல்வி இன்றியும், அடிப்படை வசதிகள் இன்றியும் குடும்ப பாரங்களுடன் பல்வேறு சுமைகளை தாங்கி நிற்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஒரு பக்கம் கல்வி செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகித பெண்கள் நல்ல நிலையில் இருந்தாலும், இன்னும் பத்து வயதிலும் பாலின துன்புறுத்தவர்களுக்கு ஆளாகி இறக்கும் அபாய நிலையில் பெண்கள் இருப்பது மகளிர் தின கொண்டாட்டத்தின் அர்த்தத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
மகளிரின் பாதுகாப்பும் மதிப்பும் கௌரவமும் உரிமையும் உயர்வும் கூட இன்னும் வலிமைமிக்க ஆண்களின் கையில் தான் இருக்கிறது. அதை தடுப்பதற்கு உண்டான வகையில் இந்த சமூகம் பக்குவப்படுத்தப்படாதது பல கேள்விகளை எழுப்புகிறது. எத்தனை இன்னல்கள் இருந்தாலும் அதையும் தாண்டி பெண்மை பெருமைப்படட்டும்! வாழட்டும்! போற்றப்படட்டும்.!!
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD, Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
08.03.2024