மகளிர் அணி அமைப்பாளர் இந்துராணி சேதுராமன் மரணம் – புதிய தமிழகம் கட்சி இரங்கல்!
புதிய தமிழகம் கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இரும்பொறை ஆ. சேதுராமன் அவர்களின் துணைவியாரும், மாநில மகளிர் அணி அமைப்பாளருமான திருமதி. இந்துராணி சேதுராமன் அவர்களுடைய திடீர் மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மாஞ்சோலையில் தொடங்கிய தேயிலை தோட்டத் தொழிலாளர் போராட்டம் வால்பாறை வரை விரிவடைந்த நாள் முதல் அப்போராட்டத்தில் முழுமையாக தங்களை இணைத்துக் கொண்டு போராடிய குடும்பத்தைச் சார்ந்தவர் இந்துராணி. மிகச் சிறிய அளவிலான உடல்நல குறைவுக்காக சிகிச்சைக்கு, சென்று சற்றும் எதிர்பாராத வகையில் மரணத்தை தழுவியுள்ளார். அவர் புதிய தமிழகம் கட்சியின் மீது தீவிர பற்று கொண்டவர்; புதிய தமிழகம் நாளிதழ் தொடங்கிய பொழுது மதுரையில் பணியாற்றியவர். அவருடைய இழப்பு புதிய தமிழகம் கட்சிக்கு பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவருடைய துணைவர் சேதுராமன் அவர்களுக்கும், இந்துராணியின் பெற்றோர்-குழந்தைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
03.03.2024