பாடகி பவதாரிணி மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்

நினைவுகள்
s2 43 Views
  • Bhavatharani
  • Bhavatharani
Published: 27 Jan 2024

Loading

இசைஞானி இளையராஜா அவர்களின் புதல்வி பாடகி பவதாரிணி மரணமெய்தி விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ’புலிக்குப் பிறந்தது பூனையாகாது’ என்பதற்கு இலக்கணமாக பவதாரிணி இளம் பிராயத்திலேயே மெல்லிசை பாடல்கள் ஆனாலும், சோகப் பாடல்கள் ஆனாலும் தனக்கே உரிய மெல்லிய குரலில் கேட்கக் கூடிய அனைவரையும் மெய் மறக்கச் செய்தவர். பல்லாண்டு காலம் வாழ்ந்து ஜொலிக்க வேண்டிய அவர், 40 வயதுக்குள்ளாக தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டது ஒட்டுமொத்த திரை உலகத்திற்கே பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரது ரசிக பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
27.01.2024