காமாட்சிபுரி ஆதீனம் மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்!
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரை அருகே உள்ள காமாட்சிபுரத்தை மையமாகக் கொண்டு இயங்கி வந்த காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் அவர்கள் முக்தி அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். அவர் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக 2022 ஆம் ஆண்டு தென்காசி செங்கோட்டையில் நடைபெற்ற உலக இந்துக்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் பங்கு பெற்று, அந்த மாநாட்டுக்கு சிறப்பு சேர்த்தார். கரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாரம்பரிய சிகிச்சைகளை அளித்து பெரும் தொண்டாற்றினார். அவருடைய பல சொற்பொழிவுகள் இறை நம்பிக்கையாளர்களுக்கு மிகவும் உற்சாகமும் நம்பிக்கையூட்டக்கூடியதாகவும் அமைந்து எண்ணற்றோர் மனக் கவலைகள் நீங்குவதற்குக் காரணமாக அமைந்தவர்.
நொய்யல் ஆற்றங்கரையில் மிக மிகச் சிறிய அளவில் ஆதீனத்தை துவங்கி, இறைப் பணியாற்றி வந்த அவர் திடீரென மரணமெய்தி விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது.
அவரை இழந்து வாடும் அவரது அனைத்து பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.03.2024.