திமுக தலைவர் கலைஞர் அவர்களின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த சண்முகநாதன் அவர்கள் மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்

Shunmuganathan
Published On: 22 Dec 2021

திமுக தலைவர் கலைஞர் அவர்களின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த சண்முகநாதன் அவர்கள் மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்

திமுக தலைவர் கலைஞர் அவர்களின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவர் சண்முகநாதன் அவர்கள். தனது 80 ஆவது வயதில் மரணமெய்தி உள்ளார். அவருடைய மரணச்செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக பதவியேற்று அவர் மறைகின்ற வரையிலும் நிழலைப் போன்று உடன் இருந்தவர். சண்முகநாதன் அவர்களை ஒரு கட்சியினுடைய தலைவரின் நேர்முக உதவியாளர் என்று வெறும் மேலோட்டமாக மட்டும் பார்க்கக் கூடாது. கலைஞர் அவர்களின் அரசியல் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திலும் இம்மியளவும் பிசகாமல், கண் இமைக்கும் நேரம் கூட விலகாமல் உதவியாளராகவும், பாதுகாவலராகவும் விளங்கியவர் அவர். 1984 ஆண்டு அவரை முதன் முறையாகச் சந்தித்தது முதல் கலைஞர் அவர்களைச் சந்தித்த போதெல்லாம் அவருடன் பல நாட்களில் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என பேசிய சந்தர்ப்பங்கள் எல்லாம் உண்டு. வழக்கமாக முக்கியமான தலைவர்கள் இடத்திலேயே நெருக்கமாக இருக்கக் கூடியவர்கள் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற உணர்வோடு செயல் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். நான் அறிந்த வரையிலும் தலைவரின் குறிப்பறிந்து செயல்பட்ட உதவியாளர் என்று சொன்னால் மிகையாகாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது உற்றார் உறவினருக்கும், அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர்.க. கிருஷ்ணசாமி, MD
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
21.12.2021