கட்சியில் இணைக
சமுதாயப் பணிகள்

கோவையில் தன் அண்ணன் திரு.ராஜு அவர்கள் தலைமையில் நிலவுடைமையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது பங்கேற்பு - கொங்கு நாட்டில் விவசாய கூலிகளுக்கு கூலியாக விளைபொருளை மட்டும் வழங்கும் போக்கிற்கு எதிர்ப்பு - முதன்முறையாக கூலியாக பணம் கொடுக்க நிலவுடைமையாளர்களுக்கு எதிராக போராடியமை.

- பிறந்த மண்ணில் பள்ளி நாட்களில் தீண்டாமை எதிராக, மனித உரிமைகளுக்காகப் போராடுதல் - பள்ளியில் நடந்த தீண்டாமைக் கொடுமைகளை தட்டிக் கேட்டல் - பள்ளி மாணவர் தலைவர் பொறுப்பு வகித்து சிறப்பாக பணி புரிதல் - சாதி வெறியர்கள் நீக்கக் கோரிக்கை - ஆசிரியர்களிடம் நிலவிய தீண்டாமையைக் கண்டித்து போராட்டம். (1966 - 1970)

- மருத்துவக் கல்லூரி மாணவர் பருவத்தில் பீகார் வெள்ளச்சேதம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் உடமைகள் திரட்டி உதவியமை - அன்றைய இந்திய பிரதமர் அன்னை இந்திராகாந்தி அம்மையார் பாராட்டுச் சான்றிதழ் பெற்றார். (1975)

- நெருக்கடி நிலையின்போது (1976 - 77) இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிய - லெனிய பிரிவு) மாணவர் பிரிவு மாநில அமைப்பாளராக இருந்தமை - கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு எதிர்ப்பு - ஜனநாயக நெறிகளை மீறி கலைக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் கலைப்பின்போது தி.மு.க, தி.க, ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களுக்கு புரட்சியாளர்களின் அறைகூவல் என்ற துண்டு பிரசுரம் அச்சிட்டு வெளியிட்டமை - கைது - சிறைவாசம் - 9 மாதம். ஆயுதம் தாங்கிய காவலர்கள் சூழ்ந்து நிற்க மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ தேர்வு எழுதியமை - ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்று மெராஜ்ஜிதேசாய் பிரதமராக பதவி ஏற்ற அன்று விடுதலை.

- 1978 விழுப்புரம் கலவரம் -12 தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை - கலவரம் - கண்டனம் - மதுரை மாநகராட்சி தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகள் -சுவரொட்டி அச்சிட்டு வெளியிட்டமை - காந்தி சிலை மீது தார் ஊற்றிய செயல் - மூன்று காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு.

- விழுப்புரத்தில் 1978 ஆம் ஆண்டு நடந்த சாதிக்கலவரத்தின் போது
அறிக்கை வெளியிட்டதற்காக இறுதியாண்டு மாணவராக இருந்தபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மூன்றுமாத சிறைவாசம் - விடுதலை.

- வேடசந்தூர் குடகனாறு அணை உடைப்பின் போது நிதி, உணவுப் பொருட்கள், உறைவிடப் பொருள்கள் திரட்டி பாதிக்கப்பட்ட இராமநாதபுரம் மக்களுக்கு நேரிடையாக சென்று விநியோகம் - அரசு இயந்திரம் அணுக முடியாத சில கிராமங்களுக்கு முதன்முதலாக சென்று உதவியமை (1978)

இராமநாதபுரம் வெள்ளச்சேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியமை (1980)

மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் விடுதி தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மாணவர்களால் புறக்கணிப்பு - தொழிலாளர்களின் உரிமைகள் பாதிப்பு - மாணவர்களுக்கு எதிராக தொழிலாளர்களுக்கு ஆதரவாக முதல் குரலை வெளிப்படுத்தியமை - மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி தொழிலாளர்களுக்கு உதவி.

தென்தமிழகக் கல்லூரிகளில் பயின்ற தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல நிலைகளில் போராடுதல்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - தேவர்சமூக மாட்டை பிடித்த தேவேந்திர குல வேளாளர் முதியவர் மீது கத்திக் குத்து - தட்டிக் கேட்ட அவனியாபுரம் மலைச்சாமி; மீது தாக்குதல் - வழக்கு - அவர்களுக்காகப் போராடுதல் - மார்க்சிய லெனினிய இயக்க தோழர்கள் எதிர்ப்பு - அமைப்பினருடன் கருத்து முரண்பாடு.

மதுரையில் செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்பு - மாணவர்கள் போராட்டம் - போராட்டத்தை ஒருங்கிணைத்தல் (1977-79)

எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது நடைபெற்ற போலீசார் சங்கம் அமைப்பதற்கு நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு.

- உடுமலை பூளவாடியில் மருத்துவமனை தொடக்கம் - தொடக்கவிழாவில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி பங்கேற்பு.

- பூளவாடி கிராமப் பகுதியில் பகுத்தறிவு பரம்பரைப் பணிகளில் ஈடுபடல் - கு.இராமகிருஷ்ணன், திருமகள், பார்வதி, திருமகள், சேலம் அருள்மொழி பங்கேற்பு - பள்ளிக் குழந்தைகளிடம் சாதிய எதிர்ப்பு பிரச்சாரம் - விடுதலை நாள் ஆகஸ்ட் 15 புறக்கணிப்பு.

- உடுமலைப்பேட்டை பூளவாடியில் மருத்துவர் தொழில் மூலம் ஏழை, எளிய
மக்களுக்கு உதவியதை பொறுக்க முடியாத சாதி வெறியர்களின் இடையூறு (1981). சாதிவெறியர்களின் இடையூறுகளை முறியடிக்க திராவிடர் கழக செயல்வீரர் கு.இராமகிருஷ்ணன், திராவிடர் கழக வீராங்கனை தோழியர் வழக்கறிஞர் அருள்மொழி, வெள்ளக்கோவில் முத்துக்குமார், தாராபுரம் கருணாநிதி, சுப்பிரமணியன், ரங்கசாமி, ஆத்துக்கிணற்றுப்பட்டி பழனிச்சாமி, எம்.கே.நடராஜன், பேராசிரியர் தங்கவேலு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வீரத்துடன் துணை நின்றனர். தோள் கொடுத்தனர். இடையூறுகள் முறியடிக்கப்பட்டன.

- பாரதீய தலித் பேந்தர்ஸ் கட்சியை (DPI) கட்சி தொடங்கப்பட்டது - அதே ஆண்டு அண்ணல் அம்பேத்கரின் மனைவி திருமதி. சவிதா அம்பேத்கரை அழைத்து மாநாடு - பாரதீய தலித் பேந்தர்ஸ் நடத்திய மாநாட்டின் அமைப்பாளர் - இம்மாநாட்டில் வை.பாலசுந்தரம், ராம்தாஸ் அத்வாலே, மலைச்சாமி, டாக்டர்.கிருஷ்ணசாமி, மற்றும் பலர் சிறப்புரை (1982).


மேலும் வாசிக்க
© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, புதிய தமிழகம் கட்சி