கட்சியில் இணைக
2009

ஜனவரி 02 தேசிய தலித் முன்னனி டெல்லியில் உருவாக்கம் - தேசிய செயலாளராக தலைவர் நியமனம் - தலைவராக ராம் விலாஸ் பஸ்வான் - செயல் தலைவராக ராம்தாஸ் அத்வாலே - முதன்மை செயலராக டாக்டர் உதித்ராஜ் தேர்வு

ஜனவரி 02 தேசிய தலித் முன்னணியின தேசியப் பொதுச் செயலாளராகத் தலைவர் தேர்வு - தலைவர் இராமவிலாஸ் பஸ்வான், செயல் தலைவர் இராம்தால் அதிவாலே, செயலாளராக டாக்டர் உதித்ராஜ் தேர்வு - டெல்லி தலைமையிடமாகக் கொண்டு இம்முன்னணி செயல்படும்.

ஜனவரி 06 பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி புதிய தமிழகம் கட்சியினர் மதுக்டை முன்பு மறியல் - தலைவர் உட்பட 100 பெண்கள் கைது - கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்பாட்டம்.

ஜனவரி திண்டுக்கல் நிலக்கோட்டையில் சடையாண்டி என்பவர் வாயில் மலத்தை திணித்த மற்றுமொரு திண்ணியம் - இழப்பீடு வழங்க கோரிக்கை.

பிப்ரவரி 06 இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் - இலங்கை கண்டியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியுரிமையை பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கி மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு இலங்கை அரசு திருப்பி அனுப்பியது தொடக்கம் - தற்காலம் வரை தமிழர் வாழ்வுரிமையை பறிக்கும் இலங்கை அரசியல் தலைமைகளின் இனவாத போக்கிற்கு கடும் கண்டனம் கோவை செய்தியாளர் சந்திப்பு.

பிப்ரவரி 7 இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவததைக் கண்டித்துப் போரை நிறுத்தக் கோரியும், தலைவர் தலைமையில் கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பு பெண்கள் இளைஞர் பங்கேற்பு.

பிப்ரவரி 20 சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் - காவல்துறை மோதல் வேதனைக்கரியது.

பிப்ரவரி 21 தென்தமிழகத்தில் தொழில் வளம் பெருக வலியுறுத்தி மாவட்ட மாநாடு - கடையநல்லூர்.

பிப்ரவரி 25 இலங்கைத் தமிழா;கள் மீது ராணுவத் தாக்குதல் - பான்கிமூன் தலையிட்டு நிறுத்த மின் அஞ்சல் கடிதம் - கிழக்கு திமோர். ஹைட்டி, காங்கோ, கெசாவோ முன் மாதரிகளைப் பின்பற்றக் கோரிக்கை.

பிப்ரவரி 28 மதுரை ஜனதாகட்சித் தலைவர் சுப்ரமணியன்சுவாமி மீது நீதிமன்றத்தில் முட்டை வீசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது - தலைவர் கண்டனம்.

மார்ச் 01 தென்தமிழகம் - மாவட்ட மாநாடு - புதுக்கோட்டை

மார்ச் 02 நெல்லை மாவட்ட மாநாடு.

மார்ச் 07 மாவட்ட மாநாடு - தூத்துக்குடி

மார்ச் 08 மாவட்ட மாநாடு - சிவகங்கை.

மார்ச் 09 அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் இலங்கைத் தமிழர் ஆதரவு உண்ணாநிலை அறப்போர் வைகோ - தா.பாண்டியன் பங்கேற்பு - தலைவர் பூங்கொத்து கொடுத்து புரட்சித்தலைவி அவர்களின் போராட்டம் குறித்து வாழ்த்தி பேசுதல் - உண்ணாநிலையில் பங்கேற்பு.

மார்ச் 09 தென்தமிழகத்தில் தொழில்வளம் பெருக வலியுறுத்தி - மாவட்ட மாநாடு - இராமநாதபுரம்.

மார்ச் 15 நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் செந்தட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் முப்பிடாதி அம்மன் கோயில் வழிபாட்டு உரிமை மறுப்பு ஆதிக்க சாதி வெறியினர் வன்முறை - தொடர்ந்து மோதல்கள் - கிருஷ்ணன் தாக்கப்படல் - மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷ் ஈஸ்வரன் மீது தாக்குதல் - ஈஸ்வரன் வெட்டிக் கொலை - தலை துண்டித்து கோரமாக கொலை பரமசிவம் என்ற இளைஞர் கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை தலைவர் நேரில் சென்று ஆறுதல் - பாதுகாப்பு கொடுக்க முடியாவிட்டால் காவல்துறை விலகி போகட்டும் இல்லாவிட்டால் எங்கள் பாதுகாப்பை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் தலைவர் சூளுரை.

மார்ச் 22 மதுரை விநோதகன் மஹாலில் கட்சியின் மாநிலப் பொதுக்குழு.

ஏப்ரல். பாராளுமன்ற தேர்தலில் மனிதநேயமக்கள் கட்சியுடன் புதிய தமிழகம் கூட்டணி.

ஜுன் 18 மதுரை அவனியாபுரத்தில் மோதல் - புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் சிற்றரசுவின் மகன் விஜயதுரை மீது தாக்குதல் - மரணம் - இறப்புச் சடங்கில் தலைவர் பங்கேற்பு - இராஜாஜி மருத்துவமனையில் தலைவர் சிற்றரசுவின் நலம் விசரித்தார் - குழுமோதலில் அப்பாவி சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கு தலைவர் வேதனை.

அக்டோபர் 7 இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இது சரியான நேரம் அல்ல - இச்செயல் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு வலு சேர்க்கும் - மத்திய அரசின் இந்நடவடிக்கைகளுக்கு தமிழக முதல்வர் துணை போகக்கூடாது - கோவை செய்தியாளர் சந்திப்பில் தலைவர் தகவல்.

அக்டோபர் 12 புதுடெல்லியில் இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல் - வழக்கு பதிவு - முன் ஜாமீன் கோரி புதிய தமிழகம் கட்சியாளர் மனு.

அக்டோபர்: 14 இலங்கைத் தமிழர்கள் தேவையை பூர்த்தி செய்ய தனிக்குழு - இந்திய நிதியை நேரடியாக இலங்கை அரசிடம் கொடுக்கக்கூடாது - இலங்கைத் தமிழர்களுக்காக அரசு அளித்துள்ள 500 கோடியில் வீடு, பள்ளிவசதி, சாலைவசதி, மருத்துமனை வசதி ஏற்படுத்த வேண்டும் என செய்தியாளர் கூட்டத்தில் தலைவர் அறிவிப்பு.

அக்டோபா: 22 விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி காளியம்மாள் என்ற தாழ்த்தப்பட்ட பெண் ரேசன் கடையில் மேல்சாதியினர் மீது கைப்பட்டது என்பதற்காக வன்கொடுமை - காளியம்மாள் மீது கடும் தாக்குதல்.

அக்டோபா; 23 கோவையில் செய்தியாளர் சந்திப்பு பிப்ரவரி 06, 07, 2010 கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு - உலகத் தமிழர்களின் துயரங்களை நிரந்தரமாக களைய நடவடிக்கை எடுக்கப்படும் - உலகத் தமிழ்;த் தலைவர்கள் - உலக புலம்பெயர் தமிழர்கள் - இந்தியாவின் பிறபகுதியில் வாழும் தமிழ்த்தலைவர்கள் பங்கேற்க போவதாக அறிவிப்பு.

அக்டோபா; 28 உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு இலட்சிணை - இலங்கையில் முள்வேலி முகாம்களில் தமிழர்கள் அவதிப்படும் சித்திரத்துடன் தமிழராய் எழுவோம் என்ற முழுக்கத்துடன் இலட்சணை வெளியீடு

நவம்பா; உலகத்தமிழா; பாதுகாப்பு மாநாடு Ulagathamilrmanadu.com,Protecttamils.in என்ற இரு இணையதளங்கள் உருவாக்கம்.

நவம்பா; 11 இராமநாதபுரத்தில் உலகத்தமிழ் மாநாடு ஆலோசனைக் கூட்டம் - கச்சத்தீவை மீட்கக் கோரும் பணிகள் விரைவுபடுத்தப்படும் - கச்சத்தீவு குறித்து புதிய தமிழகம் போராடும் - பிரபாகரன் பெற்றோரிடம் பொன்சேகா ஆதரவு கேட்பது கேலிக்கூத்து - தலைவர் கண்டனம்.

நவம்பர் 08 வாடிப்பட்டி நகரியில் மேல்சாதி குடும்பத்தில் நடந்த சண்டையை சமரசம் செய்த மலைச்சாமி தாக்கப்பட்டார் - அப்பாவி பள்ளிக் குழந்தைகள் 6 போ; தாக்கப்பட்டனர்.

நவம்பா; 22 தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் சிப்காட் தொழி;ற்பூங்கா அமைப்தற்கு நல்ல விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு - தென்தமிழகத்தில் தொழிற்சாலை அமைவதைப் புதிய தமிழகம் எதிர்க்கவில்லை. அவை ஒடுக்கப்பட்ட மக்களின் வளமான நிலங்களை ஆக்கிரமித்து எடுக்கப்படுவதை எதிர்க்கிறோம். தூத்துக்குடி - பாளைசாலை அம்பேத்கா; சிலை முதல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வரை பேரணி - ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு.

டிசம்பர் 15 தெலுங்கானா கோரிக்கையை போன்றதல்ல தமிழகம் பிரிப்பு - தமிழகத்தை எந்த நிலையிலும் பிரிக்க அனுமதிக்க மாட்டோம் - வேலூரில் தலைவர் அறிவிப்பு.

டிசம்பர் 24 மொழிவாரி மாகாண பிரிப்பின் போது தமிழகத்திலிருந்து பிரிக்கப்பட்ட பாலக்காடு, சித்தூர், திருப்பதி ஆகியவற்றை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க கோரிக்கை - கிருஷ்ணகிரி போன்ற எல்லையோர மாவட்டங்களில் தமிழர் உரிமைகளைப் பாதுகாக்க கோரிக்கை - தலைவர் கிருஷ்ணகிரி பயணம்.

டிசம்பர் 23 தலைவர் சேலம் பயணம் - தமிழர் என்பதாலேயே நீதிபதி தினகரன் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் என தலைவர் அறிவிப்பு - தமிழகத்தை இரண்டாக பிரிக்கவும் தமிழகத்தின் பகுதிகளை மாநிலமாக்க எதிர்ப்பு - விளைநிலங்களை தமிழர் அல்லாதார் பன்னாட்டு தமிழரல்லாத வடநாட்டு முதலாளிகள் அடிமாட்டு விலைக்கு வாங்குவதற்கு எதிர்ப்பு.

டிசம்பர் 7 சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியை சேர்ந்தவர்களுக்காக வீட்டு மனைப் பட்டாக்கோரிகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புதிய தமிழகம் தொண்டர்கள் முற்றுகை.

© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, புதிய தமிழகம் கட்சி