கட்சியில் இணைக
2006

ஜனவரி 02 இந்திய அரசின் பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பங்கு - தலைவர் கோரிக்கை.

ஜனவரி 24, சென்னை செய்தியாளர் சந்திப்பு - இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தாழ்த்தப்பட்டோருக்காக தனிநிதி ஒதுக்க கோரிக்கை - இரயில்வே நிதிநிலை அறிக்கையைப் போல தாழ்த்தப்பட்டோர் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க கோரிக்கை.

ஜனவரி 27, இசுலாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தனி ஒதுக்கீடு வழங்க கோரிக்கை.

ஜனவரி 27 இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு ஒரு வரலாற்றுக் கட்டாயம் - மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய மாநில அரசுகளில் ஒதுக்கீடு - தலைவர் கோரிக்கை.

ஜனவரி 29, திருச்சியில் பொதுக்குழு - 150 தொகுதிகளில் தனித்துப் போட்டி.

ஜனவரி 31, புதிய தமிழகம் மாநகரச் செயலாளர் பாரதிதேவேந்திரன் படுகொலை - தலைவர் அஞ்சலி.

பிப்ரவரி 03, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர் பணியிட விளம்பரம் - ஒரு துறை பல சிறப்புத் துறைகளாக காட்டி மோசடி - பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை - தலைவர் குற்றச்சாட்டு - தமிழக முதல்வர் - ஆளுநர் - பல்கலைக்கழக மாநிலக் குழுத் தலைவர் ஆகியோருக்கு தலைவர் கடிதம்.

பிப்ரவரி 03 மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சாதிய அநீதி - இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை - பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை.

பிப்ரவரி 05 இசுலாமியருக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கை - ஓட்டுக்காக முஸ்லீம் ஆதரவு கோஷமா குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணல்.

பிப்ரவாரி10, தேசிய தலித் சகோதர அமைப்பின் சார்பில் தலித்துக்கான தனி நிதி ஒதுக்கீடு ஒருநாள் கருத்தரங்கு (Demand for due share for Dalits in the Budget) இந்தியா பன்னாட்டு மையம் லோடிசாலை, புதுடில்லி, தாழ்த்தப்பட்ட பழங்குடி பாராளுமன்ற அமைப்புக் குழுத் தலைவர் ஆர்.எஸ்.கவாய், தலைவர் - ராம்தாஸ் அத்வாலே இந்தியக் குடியரசுக் கட்சி, டாக்டர் சுராஜ்பான், யோகேந்திரா மக்வானா, சஞ்சய்பஸ்வான்: இந்திய நீதிக்கட்சித் தலைவர் உதித்ரஜ், இன்டோர் இக்பால், தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் - சிறப்பு விருந்தினராக முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பங்கேற்பு - வரவேற்புரை நிகழ்த்தினார் தலைவர் - கருத்தரங்கில் புதிய தமிழகம் தொண்டர்கள் பங்கேற்பு - டெல்லி, பம்பாய் உயர்கல்வி நிறுவன தலித் ஆர்வலர்கள் தயாரித்த அறிக்கையை நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அளிப்பு.

பிப்ரவரி 18, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்குரிய 400 உதவிப் பேராசிரியர்கள் பின்னடைவு பணியிடங்களை நிரப்பாமல் ஏமாற்றும் துணைவேந்தர் முனைவர் மருதுமுத்துவின் செயலுக்கு கண்டனம் - மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு - மனிதவளத்துறை அமைச்சர் - பல்கலைக் கழக மானியக்குழு தலைவர் சுகதேவ் தொராட் - தமிழக ஆளுநருக்கு தலைவர் கடிதம். பின்னடைவுப் பணியிடங்களை உடனே நிரப்பக் கோரிக்கை- பின்னடைவு பணியிடங்களை நிரப்பாமல் பொது பணியிடங்களை நிரப்பும் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்.

ஏப்ரல் 02, பொது தேர்தல் - புதிய தமிழகம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி - தமிழகம் முழுவதும் 150 இடங்களில் தனித்துப் போட்டி

ஏப்ரல் 02, ஒட்டப்பிடாரம் தொகுதியில் தலைவர் போட்டி -பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் செல்வி மாயாவதி தலைவரை ஆதரித்து தென்தமிழகத்தில் பிரச்சாரம்

மே 20, அரசியல் விவகாரக்குழு கூட்டம் - திருமங்கலக்குருச்சி செல்லத்துரை மறைவிற்கு தலைவர் இரங்கல்.

ஜுன் 06, கண்டதேவி தேரோட்டம் - தாழ்த்தப்பட்ட மக்கள் தேர் இழுப்பில் பங்கு பெறுவதை உறுதி செய்ய தமிழக முதல்வர் கலைஞருக்கு தலைவர் கோரிக்கை.

ஜுன் 20, இலங்கைக்கு நவீன ராடார் கருவிகள் வழங்குவது - இராணுவ உத்திகளைப் பரிமாறிக் கொள்வது உட்பட அனைத்தையும் இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் - தலைவர் கோரிக்கை.

ஜுலை 01, இலங்கைத் தமிழர்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண - இலங்கைக்கு அழுத்தம் தர கோரிக்கை - தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை வழங்க - கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை - மதுரை இராஜாமுத்தையா மன்றத்திலிருந்து பேரணி - தலைவர் தலைமையில் பல ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்பு.

ஜுலை 21, தாமிரபரணி நினைவஞ்சலி.

செப்டம்பர் 10, தியாகதீபம் இம்மானுவேலர் நினைவேந்தல்.

அக்டோபர் 23, கல்லூரி ஆசிரியர் பணியிடம் - 495 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - தமிழக முதல்வருக்கு தலைவர் வேண்டுகோள்.

நவம்பர் 23, கயத்தாறு யூனியன் (தனி) சேர்மன் பெருமாள் என்ற பெண் தன் நாற்காலியில் உட்கார தடை - அப்பகுதி சாதிவெறியர்களின் வெறியாட்டம் - ஜனநாயகக் கடமையாற்ற தடை - தலைவர் எதிர்ப்பு.

டிசம்பா 06, மனைப்பட்டா - வங்கிக் கடன் வேலைவாய்ப்புக்கோரி புதிய தமிழகம் சென்னை மாநகர மாநாடு - தலைவர் பங்கேற்பு.

© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, புதிய தமிழகம் கட்சி