கட்சியில் இணைக
2004

நாடாளுமன்றத் தேர்தல் மூன்றாவது அணி அமைத்து தென்காசித் தொகுதியில் போட்டி.

பிப்ரவரி துறையூர் புத்தானம்பட்டி கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து என்ற பெயரில் தமிழரசன் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தலைவர் நரில் சென்று ஆறுதல் - இழப்பீடு வழங்கக் கோரிக்கை - வைரிசெட்டிப்பாளையத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வன்கொடுமைக்கும் இதற்கும் உள்ள தொடர்பை விளக்குதல்.

பிப்ரவரி 07, நாடாளுமன்ற தேர்தல் புதிய தமிழகம் கட்சியின் கிராமக் கிளை ஒன்றிய, நகர, மாவட்ட பிரதிநிதிகள், ஊர்த் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் - தென்காசி.

ஜுன், 25 - 27 புதிய தமிழகம் பொதுக் குழு - உதகை.

காவிரி தமிழக உரிமை - மாநிலங்களின் மறு சீரமைப்பிற்காக ஆணையம் எல்லைத்தமிழர்களின் தொல்லைதீர வற்புறுத்தல் - கைத்தறி நெசவாளர்களை பாதிக்கும் சென்வாட் கலால் வரியை நீக்க செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை - கண்டதேவி தேரோட்டத்தில் எளிய மக்களின் பங்கு உறுதி செய்யப்பட வேண்டும் - தனியார்துறை வேலைவாய்ப்பு - சுயநீதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கோரிக்கை.

ஜுன், காளப்பட்டியில் அருந்ததிய மக்களின் மீதான வன்கொடுமைக்கு கடும் கண்டனம் - இழப்பீடு வழங்க கோரிக்கை - ஊடகவியலாளர்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தலைவர் பயணம் - செய்தியாளர் சந்திப்பு.

ஜுலை 01, தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணித்து விட்டு கண்டதேவி தேர் ஓடியது நீதிமன்ற வழிகாட்டுதல்களை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போலீஸ் தாக்குதல் - 20 பேர் படுகாயம்.

ஜுலை 23, தாமிரபரணி தியாகிகளுக்கு நெல்லையில் நினைவு அஞ்சலி.

ஜுலை 24 பாளையங்கோட்டை நீதிமன்றத்திற்கு சென்று உணவருந்த வந்த தலைவர் மீது வெடிகுண்டு தாக்குதல் - பேராசிரியர் வேலுசாமி ஓட்டுநர் செல்வராஜ் படுகாயம் - தலைவரின் உயிரை காப்பாற்றிய ஆரோக்கியநாதபுரம் எளிய மக்கள் - தலைவருக்கு பாதுகாப்பு வழங்கிய டி.ஐ.ஜி கோபாலகிருஷ்ணன் குற்றவாளிகளை தன் காரில் விரட்டி சென்று பிடித்த மதுவிலக்கு கூடுதல் எஸ்.பி.கோபால் மற்றும் பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், சண்முகம், ஜெயக்குமார் கடமையுணர்வால், குற்றவாளிகள் பிடிபட்டனர்.

செப்டம்பர் 01, பொய்யாகப் புனையப்பட்ட மாஞ்சோலை கொலை வழக்கில் இருந்து தலைவர் விடுதலை - நெல்லை விரைவு நீதிமன்றம் தீர்;ப்பு

அக்டோபர், 6 தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி இரட்டை வாக்குரிமை கோரிக்கை - விகிதாச்சார வாக்குரிமைக்கு அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க புதிய தமிழகம் கோரிக்கை.

நவம்பர் 01, தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை கோரி டிசம்பரில் டெல்லியில் மாநாட்டு பேரணி - தலைவர் அறிவிப்பு.

டிசம்பர் 6, தாழ்த்தப்பட்டோருக்கான சுயநிர்ணய உரிமையும் அடித்தள மக்களுக்கான ஜனநாயகமும் (Self determination of SC/St's for democracy a Grass Rot Level )இ புது டெல்லியில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாடு கருத்தரங்கில் மாண்புமிகு வி.பி.சிங் உள்ளிட்ட அனைத்திந்திய தலைவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்பு.

© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, புதிய தமிழகம் கட்சி