கட்சியில் இணைக
2002

ஜனவரி 28, ஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தல் - தலைவர் போட்டி.

பிப்ரவரி 25, தோட்டத் தொழிலாளர் தொடர் உண்ணாவிரதம் - குன்னூர்.

மார்ச் 06, மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு தலைவர் எதிர்ப்பு.

மார்ச் 14, தோட்;டத் தொழிலாளர்கள் பிரச்சினை - நாள் ஊதியம் குறைப்பு - கொத்தடிமை நிலை - அடிப்படை உரிமைகள் வழங்கப்படாமை - மத்திய அரசின் தலையீடு கோரி தொழிலாளர் அமைச்சர் சரத் யாதவ் தலையிட கோரிக்கை.

மார்ச் 24, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம்.

ஏப்ரல் 13, 20.11.2001 அன்று வால்பாறை முடிஸ் தொழிற்சாலைக்கு வந்த தொழிலாளர்களை தடுத்ததாக முடீஸ் காவல்நிலைய வழக்கு - சென்னை உயர்நீதி மன்ற ஜாமீன் பெற்றார். வால்பாறை நீதிமன்றம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் - சம்மன் - சம்மனை பெற தலைவர் மறுப்பு - தலைவருக்கு பிடிவாரண்ட்.

மே, 1 கோவையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அணிவகுப்பு.

மே, 16 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் புதுடெல்லியில் பேரணி

ஜுன் 16, கோவை விமான நிலையத்தில் தலைவருக்கு கொலை மிரட்டல் - காவலர் மீது வழக்கு - டி.ஜி.பி. நடவடிக்கை.

ஜுன் 24, கண்டதேவி தேர்வட இழுப்புச் சிக்கல் - மாவட்ட ஆட்சித் தலைவர் ஐஸ்பீர்சிங்ஜாஜ், சிவகங்கை காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் தாழ்த்தப்பட்டவா;கள் நால்வர் அடித்து விரட்டப்படல் - தேர் இழுக்க வந்த தாழ்த்தப்பட்ட மக்களை சுற்றி காவல் அரண் - தடு;ப்பு - துரோகம் - அரசு இயந்திரம் தோல்வி - ஊடகங்களில் பொய் செய்தி.

ஜுன் 21 முதல் - ஜுலை 22 வரை செப்டம்பர் 6,7, 8 நெல்லை மாநில மாநாடு - முன் தயாரிப்புக் கூட்டங்கள் - நிதி வழங்கும் கூட்டங்கள் - மாநாடு விளக்கக் கூட்டங்கள் - தலைவர் பங்கேற்பு.

ஜுன் 24, 17 மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் - தலைவர் அறிவிப்பு.

ஜுலை 13, சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப் பயணம்.

ஜுலை 23, மாநாட்டுக்கான பிரச்சார சுற்றுப் பயணம் - நெல்லை மாவட்டம் - தாமிரபரணி தியாகிகள் நினைவு அஞ்சலி.

2002 ஆகஸ்ட் மாநாட்டுக்கு தயாரிப்பு பணிகள் - மாநாட்டுக்குழு விரைவு.

2002 செப்டம்பர் 6,7,8 மூன்றாவது மாநில மாநாடு மற்றும் சமநீதி மாநாடு.

செப்டம்பர் 11, தியாகதீபம் இம்மானுவேலர் நினைவேந்தல்.

செப்டம்பர் 16, தமிழக உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் 10,000 பணியிடங்களை நிரப்ப இருப்பதாக கல்வி அமைச்சர் தம்பித்துரை அறிவிப்பு - அரசாணை எண் 91 நாள் 28.11.2001 ன்படி பின்னடைவு / விடுபட்ட பணியிடங்களை முதலில்ட நிரப்ப தலைவர் கோரிக்கை.

அக்டோபர் 12, மத மாற்றத் தடைச்சட்டத்தை எதிர்த்து அக்டோபர் 19 தலித் சிறும்பான்மையினர் ஆர்ப்பாட்டம் - அறிவிப்பு - அக்டோபர் 24 இல் பேரணி - கண்டண பொதுக்கூட்டம் - தலைவர் அறிவிப்பு.

அக்டோபர் 20, மதமாற்றத் தடைச்சட்டத்தை வாபஸ் பெறும்படி சென்னையில் டிசம்பர் 6-ல் பேரணி - அறிவிப்பு.

அக்டோபர் 30, தமிழகத்தின் பல்வேறு சமூகப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு தமிழக அரசு ஆசான் பூசார்த்துதல் (குருபூஜை) அரசு செலவில் நடத்த புதிய தமிழகம் கோரிக்கை - ஒண்டிப்பகடை, வீரன் சுந்தரலிங்கம், இம்மானுவேலர், செகுடந்தாள் முருகேசன், மேலவளவு முருகேசன், தி இந்து நாளிதழின் நிறுவனர் ஜி.சுப்பிரமணிய அய்யர், பா.வே. மாணிக்க நாயக்கர், சிவகங்கை இராமசந்திர சேர்வை - பொதுவுடைமை முன்னோடி சிங்காரவேலர் - கோவை வெள்ளிங்கிரி கவுண்டர் - டி.ஏ.இராமலிங்கம் செட்டியார் உள்ளிட்டோருக்கு அரசு சார்பில் விழா எடுக்கக் கோரிக்கை

நவம்பர் 01, வறுமை ஒழிப்பும் நதிநீர் இணைப்பும் நமக்கு உடன்பாடானவை - தலைவர் அறிக்கை.

நவம்பர் 16, வேலூர் சிறையில் பொடா சட்டத்தில் கைதான ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவை தலைவர் சந்தித்தார் - விரையில் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை.

டிசம்பர் 06, மதமாற்றத் தடைச்சட்ட எதிர்ப்புப் பேரணி - சென்னை - இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு.

© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, புதிய தமிழகம் கட்சி