கட்சியில் இணைக
2010

ஜனவரி 01.06 மலேசியா சிங்கப்பூர் சுற்றுப் பயணம்.

ஜனவரி - உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு ஏற்பாடுகள்.

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கான நீதிமன்ற போராட்டம் - இரண்டுநாள் இடைவெளியில் மாநாட்டிற்கு அரசு நிர்வாகம் அனுமதி

பிப்ரவரி 02 சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொளசம்பட்டியில் கோயில் நிலசிக்கலில் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது வன்கொடுமை தலைவர் கண்டனம்.

பிப்ரவரி 06, 07 உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு - மலேசியா பினாங்கு மாநில துணைமுதல்வர் இராமசாமி உட்பட நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் 110 பேர் வருகை - உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் பங்கேற்பு, மாநாடு நடத்த அனுமதி வழங்கிய சில நாட்களில் பிரமாண்ட ஏற்பாடுகள் - மாநாடு வெற்றி - உலகத்தமிழர் பாதுகாப்பு பிரகடனம் வெளியீடு.

பிப்ரவரி 11 கோவையில் செய்தியாளர் சந்திப்பு - ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலிருந்து ஆங்கிலேய அரசால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கான குடியுரிமை பொறுப்பை ஏற்க வேண்டி ஏப்ரலில் பிரிட்டிஷ் தூதரகத்தில் உலகத் தமிழர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மனு கொடுக்க திட்டம் அறிவிப்பு.

18 சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் கங்காதரன் தெருவில் புதிய தலைமை நிலையம் திறப்பு - தவறான செயல்பாடுகள் குறித்து ஆளுநர், உள்துறை செயலரிடம் முறையீடு.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கக் கோரிக்கை - சென்னை செய்தியாளர் கூட்டத்தில்.

20சேலம் சுற்றுப் பயணம் - செய்தியாளர் சந்திப்பு, தி.மு.க. அரசின் செயல்பாடுகள் முல்லைப்பெரியாறு சிக்கலில் நிறைவளிக்கவில்லை.

23 எளிய மக்களுக்கான ஓட்டல் பண்டங்கள் விலை குறைக்க கோரிக்கை.

23 திண்டுக்கல் - குமுளி நான்கு வழிச்சாலையை மாற்றி அமைக்க வேண்டும் - சீலியம்பட்டி, கோட்டூர் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்கள் அழியாமல் தடுக்க கோரிக்கை

25தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு குறித்து தமிழகத் தாழ்த்தப்பட்ட தலைவர்கள் கூட்டுச் சந்திப்பு, முனைவர் செ.கு.தமிழரசன் கருப்பன் இ.ஆ.ப. நுங்கைபாபு உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் உள்ஒதுக்கீடு குறித்துப் பேச்சு.

மார்ச் 03 மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு - கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் - உணவுப் பண்டம் விலையேற்றம் குறித்து மார்ச் 15 ஆர்ப்பாட்டம் - பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - இப்போதைய இடஒதுக்கீட்டை விரைந்து முழுமையாக செயல்படுத்தி ஐந்தாண்டுகளில் முடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் தமிழின அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும்.

மார்ச் 15, உணவுப்பண்ட விலையேற்றம் - கோவை, சேலத்தில் போராட்டம் - தலைவர் பங்கேற்பு.

மார்ச் 22, வேலூர் திருமணம் - தலைவர் பங்கேற்பு.

மார்ச் 22 சென்னைக்கு வரும் இலங்கை கிரிக்கெட் வீரர் எதிராக போராட்டம் - தலைவர் அறிவிப்பு.

மார்ச் 23 தமிழக உயர்கல்வியின் தரம் வீழ்ச்சி - தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் சிறப்பு நிலையை பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை - தலைவர் திட்டவட்டம் - விரிவுரையாளர் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புதல் - முறைக்கேடு - தலைவர் கண்டனம்.

மார்ச் 24 தமிழக உயர்க்கல்வியின் தரம் வீழ்கிறது - பல்கலைக்கழகங்கள் சிறப்பு தகுதி வாய்ந்த ஆய்வு நிலையங்களாகத் தொடர்ந்து செயல்படும் நிலை இல்லை - தமிழகப் பல்கலைக் கழகங்கள் இடஒதுக்கீட்டை முழுவதும் பின்பற்றுவதில்லை - தலைவர் குற்றச்சாட்டு.

© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, புதிய தமிழகம் கட்சி