கட்சியில் இணைக
2001

ஜனவாரி 08, புதிய தமிழகம் தலைமை அலுவலகம் மீது பிரிந்துபோன துரோகிகள் தாக்குதல் - தலைமை அலுவலக பொருள்கள் - கட்சி அச்சு ஆவணங்கள், ஒலி ஒளி ஆவணங்கள் அனைத்தும் அழிப்பு - அரசு நடவடிக்கை எடுக்க வற்புறுத்தல் - சி.பி.ஐ விசாரணை கோரிக்கை - சட்டசபைப் புறக்கணிப்புப் போர்.

ஜனவாரி 21, தமிழக தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களின் சார்பில் வெளிவந்த முதல் நாளேடு ‘புதிய தமிழகம்’ நம்பிக்கை நாளிதழ் என்ற முழக்கத்துடன் மதுரையிலிருந்து அச்சிட்டு வெளியிடப்பட்டது.

பிப்ரவாரி 07, குஜராத் பூமி அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமான நிதிஉதவி - தலைவர் கோரிக்கை.

பிப்ரவரி 08, தி.மு.க அழைத்தால் பேச்சு நடத்த தயார் - தலைவர் அறிவிப்பு.

பிப்ரவரி 09 - 11, தலைவர் சங்கரன் கோயில் தொகுதியில் சுற்றுப் பயணம்.

பிப்ரவரி 14, வாசுதேவநல்லூர் தொகுதியில் பிரச்சாரம்.

பிப்ரவரி 16, தி.மு.க. - புதிய தமிழகம் தேர்தல் உடன்பாடு.

பிப்ரவரி 19 - 22, ஒட்டப்பிடாரம் தொகுதியில் தலைவர் சுற்றுப் பயணம்.

பிப்ரவரி 24, இராமநாதபுரத்தில் சுற்றுப் பயணம்.

பிப்ரவரி 25, தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளோம். இந்த வெற்றியைத் தக்கவைக்க தி.மு.க கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

மார்ச் 13, தி.மு.க கூட்டணியில் புதிய தமிழகம் பேச்சுவார்த்தை.

மார்ச் 20, தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகள் உடன்பாடு.

மார்ச் 21, புதிய தமிழகம் தனிசின்னத்தில் போட்டி - தலைவர் அறிவிப்பு.

மார்ச் 29, தி.மு.க கூட்டணியின் செல்வாக்கு தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளது - தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட அனுபவம் - தலைவர் பேட்டி.

ஏப்ரல் 06, 22 ஆயிரம் கிராமங்களில் இரட்டைக் குவளைமுறை ஒழிய முதலில் குரல் கொடுத்தது புதிய தமிழகம் - வலங்கைமான் தொகுதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தலைவர் பேச்சு.

ஏப்ரல் 07, வௌ;ளையறிக்கை, கல்வி வேலைவாய்ப்பில் பின்னடைவுப் பணியிட இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது புதிய தமிழகம் - தலைவர் பேச்சு.

ஏப்ரல் 09, தேசிய ஜனநாயக முன்னணியில் தேர்தல் மாநாட்டில் தலைவர் உரை - புதிய தமிழகம் வேட்பாளர்கள் பூட்டுச்சாவி சின்னத்தில் தமிழகம் முழுவதும் பத்து தொகுதிகளில் போட்டி

ஏப்ரல் 11 - 13, சேடப்பட்டி பொதுத் தொகுதியில் புதிய தமிழகம் போட்டி - தலைவர் சுற்றுப் பயணம்.

ஏப்ரல் 16, விடுதலை வீரர் சுந்தரலிங்கம் நினைவு நாள் விழா - தமிழக முதல்வர் கலைஞர் - தலைவர் பங்கேற்பு.

ஏப்ரல் 15, தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை பதிவு செய்தது புதிய தமிழகம் - வெற்றிக்கோட்டை எட்டவில்லை - தேர்தலில் போட்டியிட ஏற்பட்ட தடை ஜெயலலிதாவுக்கு அனுதாப அலையாக மாறிவிட்டது.

ஏப்ரல் 18, தாழ்த்தப்பட்டோர் ஓட்டு வங்கியில் குறைவில்லை - தாழ்த்தப்பட்டோர் அல்லாதார், தாழ்த்தப்பட்டோருக்கு வாக்களிப்பதில் தயக்கம் - பெரியார் வழியில் பண்பாட்டு புரட்சிக்கு தலைவர் அழைப்பு.

ஏப்ரல் 19, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் - தலைவர் பங்கேற்பு.

ஏப்ரல் 25, பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எமது போராட்டப்பணித் தொடரும் - தலைவர் அறிவிப்பு.

ஜுன் கண்டதேவி தேர் ஓடவில்லை - 144 தடையுத்தரவு.

ஜுலை 27, தாமிரபரணி நினைவு தினம்.

செப்டம்பர் 11, தியாகதீபம் இம்மானுவேலர் நினைவேந்தல்.

நவம்பர் 10, போக்குவரத்துத் தொழிலாளர் - தோட்டத் தொழிலாளர்களுக்கு 20மூ போனஸ் வழங்க தலைவர் கோரிக்கை.

நவம்பர் 11, புதிய தமிழகம் தேயிலைத் தோட்ட தொழிலாளர் சங்க மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம் - வால்பாறை அண்ணாத்திடல் - பல ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க - தி.மு.க. விலிருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் விலகல் - புதிய தமிழகத்தில் இணைந்தனர்.

நவம்பர் 13, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் இருபது சதவிகித போனஸுக்காக காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு

நவம்பர் 20, தேயிலைத் தோட்ட அதிபர்கள் அறிக்கைக்கு தலைவர் கடும் கண்டனம் - வால்பாறை முடீஸ் காவல் நிலையத்தில் தலைவர் மீது பொய் வழக்கு.

நவம்பர் 24, நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணித்தை கைது செய்துள்ளது அடக்குமுறையின் தொடக்க நிகழ்ச்சி.

நவம்பர் 25, தோட்டத் தொழிலாளர் போராட்டத்தை முடக்க சதி திட்டம் - மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர் மோதல் - அந்தோணி முத்து கொலை வழக்கில் தலைவர் மீது பொய் குற்றச்சாட்டு - கோவையில் கைது - கோயில்பட்டி மத்திய சிறையில் சிறைவைப்பு - பொய் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் - தமிழகம் முழுவதும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - பிணையில் விடுதலை - பொய் வழக்கு நீதிமன்றத்தில் தோற்றது.

டிசம்பர் 28, வால்பாறை கருமலை எஸ்டேட்டில் மீண்டும் போராட்டம் - கத்தரிவெட்டுக்கு தொழிலாளர் எதிர்ப்பு.

© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, புதிய தமிழகம் கட்சி