கட்சியில் இணைக
2000

ஜனவரி 01, கன்னியாக்குமரி திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் கலைஞருடன் - தலைவர் பங்கேற்பு.

ஜனவரி 12, திருவள்ளுவரை ‘அய்யன்’ என கலைஞர் அழைத்ததற்கு தலைவர் எதிர்ப்பு - அறிக்கை.

ஜனவரி 21, தோட்ட அதிபர்கள் - தொழிலாளர் ஒப்பந்தம் 13.01.2000 - முறையற்றது - லெட்டர்பேடு தொழிற்சங்கம் - அதிபர் உடன்பாடு - புதிய தமிழகத்தை அழைக்காதது ஏன் என Planters Association of Tamil Nadu குன்னூர் அமைப்புக்கு தலைவர் கடிதம்.

ஜனவரி 24, போலித் தோட்டத் தொழிலாளர் சங்கங்களின் உரிமைகளை ரத்து செய்ய கோரிக்கை - போலி சங்கங்களுடன் தோட்ட அதிபர்கள் ஒப்பந்தம் ஒரு மோசடி - PAT (Planters Association of Tamil Nadu) தோட்ட நிறுவனத்தில் ‘பாதியளவே’ உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பில் பல தோட்டநிர்வாகங்கள் இல்லை. எனவே PAT- தொழிற்சங்க உடன்பாடு முறையற்றது - சென்னை செய்தியாளர் சந்திப்பில் தலைவர் விளக்கம்.

ஜனவரி 25, நீலகிரி, கோத்தகிரி பர்ன்சைட், கூட்டாடா தோட்டத் தொழிலாளர்களை சந்திக்க தலைவர் பயணம், 25.01.2000 அனுமதி மறுப்பு - இந்திய குடியரசு நாளில் செல்ல முடிவு.

தமிழக சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அறந்தாங்கி, நெல்லிக்குப்பம், திருச்சி 2 ஆகிய தொகுதிகளில் ஆப்பிள் சின்னத்தில் போட்டி.

மார்ச் 12, தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவுப் பணியிடங்களுக்கான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிடாவிட்டால், மே மாதம் சாலை மறியலில் ஈடுபடுவோம் - இணைந்து போராட மருத்துவர் இராமதாசுக்கு அழைப்பு - அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள், மீனவர்களுக்கு அரசியல் சட்ட திருத்தம் மேற்கொண்டு உள் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை.

மார்ச் 24, 25, நாகை மாவட்டத்தில் பல இடங்களில் கொடியேற்றம்,
பொதுக்கூட்டம் - தலைவர் உரை.

மார்ச் 24, புதிய தமிழகம் கோரிய வெள்ளையறிக்கையை வெளியிடுவோம் - தமிழக முதல்வருக்கு தலைவர் நன்றி.

மார்ச் 25, வேலை வாய்ப்பில் மீனவர்களுக்கு தனி இடஒதுக்கீடு - நாகையில் மீன்பிடித்துறைமுகம் - நாகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் - தலைவர் கோரிக்கை - கோவில் நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

ஏப்ரல் 06, ஜாதி வெறியைத் தூண்டும்வகையில் சமீபகாலமாக வெளிவரும் திரைப்படங்களின் பெயர்கள், பாடல்கள், வசனங்கள், காட்சியமைப்புக்கள் சாதிய மனோபாவத்துடன் இடம் பெறுவதைக் கண்டித்து - தணிக்கை அலுவலகம் சாஸ்திரிபவன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

ஏப்ரல் 07, விளாத்திகுளம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒட்டப்பிடாரம் தொகுதி புறக்கணிப்பு - ஒட்டப்பிடாரம் பகுதியை சேர்க்க தலைவர் கோரிக்கை.

ஏப்ரல் 11, சரத்குமார் நடிக்கும் ‘மாயி’ படத்தின் கதைக்கு தலைவர் எதிர்ப்பு - படத்தின் உள்ளடக்கம் பற்றி பிராந்திய தணிக்கை அலுவலரிடம் புதிய தமிழகம் மனு.

ஏப்ரல் 16, வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா - தலைவர் - ஆலடி அருணா - ஜெனிபர் சந்திரன் - பி.எச்.பாண்டியன் பங்கேற்பு - கட்டபொம்மனுக்கு சுந்தரலிங்கம் போல கருணாநிதிக்கு கிருஷ்ணசாமி துணைநிற்க - விழாவில் ஆலடி அருணா பேச்சு.

ஏப்ரல் 18, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் - வத்தராயிருப்பு மோதல் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தரவும் - கடனுதவி வழங்கவும் தலைவர் கோரிக்கை.

மே 06, அத்தியாவசிய பண்டங்களின் விலைஉயர்வு - மண்ணென்ணெய், கேஸ் விலையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.

மே 06, வெள்ளையறிக்கை கோரி இரயில் மறியல் போராட்டம் - அறிவிப்பு - நடந்தது?

மே 07, இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் வாரிசுகளுக்கு மத்திய அரசுப் பணி - நாகை மாவட்ட புதிய தமிழகம் கோரிக்கை.

மே 16 - 20 - சமுதாய நீதி சமநீதியாக உருவாக 1996 முதல் கேட்ட ‘வெள்ளையறிக்கை’ சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டது. பட்டியல் சாதிகள் / பழங்குடிகள் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் பின்னடைவு பணியிடங்கள் எண்ணிக்கை வெளிவந்தது. தலைவரின் முயற்சிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கோவை மானமிகு சி.டி.தண்டபாணி புகழாரம், பார்வர்ட் பிளாக் உறுப்பினர் திரு.சந்தானமும் டாக்டரின் கோரிக்கையை ஆதரித்தார், பாராட்டினார்.

மே, 20 - சென்னையில் தலைவர் டாக்டர் தலைமையில் இலங்கைத் தமிழர் ஆதரவுப் பேரணி ‘புத்த பெண்ணே யுத்தம் செய்யாதே’ என முழக்கம் எழுப்பப்பட்டது - இலங்கை தூதுவராலயத்தில் தலைவர் கோரிக்கை மனு கொடுத்தார்.

மே 22 செயற்குழு

- பஞ்சுமி நிலங்களை மீட்க வேண்டும் - கோவில் நிலங்களை ஆதிக்க சாதியிடம் இருந்து பிடுங்கப்பட்டு 99 ஆண்டு குத்தகைக்கு என்ற நிலை மாற்றப்பட்டு எளிய மக்களுக்கு பிரித்து தரப்பட வேண்டும். அனைத்து
வகையான நிலங்களையும் அரசே கையகப்படுத்த வேண்டும். நிலவுடைமையில் ‘இசுரேல்’ மாதிரிகளை தமிழகம் பின்பற்ற வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்பில் ‘புதிய தமிழகம்’ தொண்டர்கள் ஈடுபட
வேண்டும். வௌ;ளை அறிக்கையில் உடன்பாடு இல்லாவிட்டாலும் வெள்ளை அறிக்கையில் கூறப்படும் 11,000 பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் ஆசிரியப்பணியிடங்கள் முதல் பாடப்பிரிவுகள் வரையில் அனைத்து நிலை ஒதுக்கீடு அவசியம். கேரளத்தில் ஆண் தொழிலாளர்களுக்கும் பெண் தொழிலாளர்களுக்கும் சமக்கூலி முறை வழக்கில் உள்ளதைப் போல தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும். ஆண்களை ஏ பிரிவு எனவும் பெண் தொழிலாளர் டீ- பிரிவு எனவும் வேறுபடுத்தி ஊதியம் வழங்கும் முறை ஒழிக்கப்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர்கள் பெண் சிசுக் கொலை எதிர்ப்புப் பணிகளில் புதிய தமிழகம் ஈடுபடும். பெண் சிசுக்களை கொலை செய்யும் சமூகப்பிரிவுகளை இடஒதுக்கீடு வழங்கும் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். பள்ளன், பறையன், சக்கிலியன், வண்ணான், நாவிதன் ஆகியோரை ‘அன்’ விகுதியிட்டு வழங்குவதை மாற்ற வேண்டும்.

மே, 31 - இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உண்ணா நோன்பு போராட்டம் - கட்சிகளைக் கடந்து மக்கள் பங்கேற்பு.

ஜுன் கண்டதேவி தேர் ஓடவில்லை - தடையுத்தரவு.

ஜுன், 2 தமிழக அரசின் நல்வாழ்வுத் துறையில் 350 மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல், பெண் பணியிட விளம்பர வெளியீட்டுக்கு எதிர்ப்பு - பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை.

ஜுன் 06, சென்னையில் அம்பேத்கர் மணிமண்டபம் திறப்பு விழா - கலைஞர், தலைவர் - மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.

ஜுன், 17 பெரம்பலூர் பொம்மனாம்பட்டி திரு.ச.விசுவநாதன் என்ற எளிய மக்கள் பிரிவினரின் நிலம் போலி ஆவணங்கள் மூலம் பறிப்பு - புதிய தமிழகம் கண்டனம். பெரம்பலூர் ஆட்சியருக்கு கோரிக்கை - காவல்துறை கண்காணிப்பாளருக்கு புதிய தமிழகம் தலைவர் கோரிக்கை.

ஜுன், 29, தலைவர், அமொரிக்கா, கனடா, செருமனி, பிரான்ஸ் நாடுகளில் தமிழ்ச் சங்கங்கள் அழைப்பை ஏற்று பயணம். தமிழ்கூறும் நல்லுலகத் தமிழர்களின் அன்புக்குப் பாத்திரமானார்.

ஜுலை 19, தலைவர் அமரிக்கா, கனடா, ஜெர்மனி நாடுகளில் சுற்றுப் பயணம், பிரான்ஸில் தமிழ் அமைப்புக்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு - 16 ஜுலை அன்று பிரான்ஸிலிருந்து ஜுலை 23 தாமிரபரணி மாவீரர் நாளில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்க தொலைநகல் அறிக்கை.

ஜுலை 20 சென்னை வருகை.

ஜுலை 23, தாமிரபரணி தியாகிகள் நினைவுநாள் மலர் அஞ்சலி; தோட்ட தொழிலாளர் சிக்கலை உலகத் தொழிலாளர்கள் அமையம் (ஐடுழு) கொண்டு செல்வதாக தலைவர் அறிவிப்பு.

ஜுலை 23, தாமிரபரணி தியாகிகள் நினைவு பேரணி - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவு - பேரணி ஜுலை 30க்கு ஒத்திவைப்பு.

ஜுலை 30, தாமிரபரணி தியாகிகள் நினைவு பேரணி - மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு எழாவிட்டால் துப்பாக்கி ஏந்தவும் தற்கொலைப் படையாக மாறவும் தயங்கமாட்டோம் - தலைவர் ஆவேசம் - தாமிரபரணி தியாகிகள் நினைவுத்தூண் அமைக்க அரசிற்கு 6 மாதம் கெடு.

ஆகஸ்ட் 14 புதிய தமிழகத்தின் செயற்குழுச் கூட்டம். தாமிரபரணி நினைவுத் தூண் - தோட்டத் தொழிலாளர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு - 77 சாதிகள் உள்ள பட்டியல் தொகுப்புக்கு ஆதிதிராவிடர் என பெயரை பயன்படுத்த எதிர்ப்பு - பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை - பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை - விருதுநகர் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் தேவேந்திரகுல வேளாளர்கள் இரண்டு பெண்கள் உட்பட ஆறுபேர் வெட்டிக் கொலை - நீதி விசாரனைக்கு கோரிக்கை. பட்டியல் சாதிகளின் சாதிப் பெயர்களில் ‘இன்’ என்ற பின் ஓட்டை சேர்க்கும் நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு.

ஆகஸ்ட் 17 தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூரில் பட்டியல் சாதி பள்ளிப் பெண் குழந்தைகள் மீது வன்கொடுமை தாக்குதல் - பாலியல் துன்புறுத்தல் - தட்டிக்கேட்ட நாகராஜன் மனைவி கடப்பாரையால் மண்டையில் தாக்கப்பட்டு மரணம் - மாரிமுத்து மகள் இளங்கோவன் அரிவாள் வெட்டு - முதல்வர் தலையிட புதிய தமிழகம் கோரிக்கை - இழப்பீடு வழங்கவும் நீதி விசாரணை நடத்தவும் கோரிக்கை.

ஆகஸ்டு மாஞ்சோலை அவதூறு வழக்கு - நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முறையீடு வழக்கை எதிர்கொள்ள - மக்கள் மன்றத்தில் அறப்போராட்டம் அறிவிப்பு - தமிழக முழுவதும் நீதிமன்றங்கள் முன் ஆகஸ்டு 14 போராட்டம் அறிவிப்பு - சட்டச்சிக்கல் காரணமாக தற்காலிக நிறுத்தம்.

ஆகஸ்ட் 27 நீதித்துறையில் தலித் விரோதிகள் - ஜுனியர் விகடன் நேர்காணல்.

ஆகஸ்ட் 30, தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக உள்ளது - பதிய கட்சிகள் தேவையில்லை - தலைவர் கருத்து.

செப்டம்பர் 10, சிவகாசி தீப்பெட்டி தொழில் நலிவடைவதை தடுக்க கண்டன ஊர்வலம்.

செப்டம்பர் 11, தியாகதீபம் இம்மானுவேலர் நினைவுநாள் - தலைவர் அஞ்சலி.

சென்னை ஐ.ஐ.டி.யில் இட ஒதுக்கீடு - விடுபட்ட பணியிடங்களை உடன் நிரப்ப கோரிக்கை

அக்டோபர் 1,2 ஆகிய நாட்களில் திருச்சிராப்பள்ளியில் ‘புதிய தமிழகம்’ கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு சமுதாய அரசியல் தளங்களில் புதிய திருப்புமுனை - இரண்டு இலட்சம் மக்கள் பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் சிந்தாமணி அறிஞர் அண்ணா சிலையிலிருந்து துவங்கி, பேரணி - இரண்டு நாள் மாநாடு - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.

புதிய தமிழகம் தொண்டர் மீது உள்ள காவல் துறை வழக்குகள் நீக்க கோரிக்கை - தாயகம் திரும்பும் தமிழீழ ஏதிலிகள் மீது சிங்கள இராணுவம் நடத்தும் கொடுமைகளுக்கு எதிர்ப்பு - தமிழக மீனவர் உயிர் காப்பாற்றக் கோரிக்கை - கட்சியின் மாநில மாநாடு அக்டோபர் 1, 2 தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு.

நவம்பர் 14, மோகன் கமிஷன் அறிக்கையை நிராகாரிக்க தலைவர் கோரிக்கை.

நவம்பர் 15, மண்ணெண்ணெய், டீசல், கேஸ் விலை உயர்வை ரத்து செய்ய கோரி சென்னை துறைமுகம் அம்பேத்கர் சிலை அருகில் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

டிசம்பர் 30, தோட்டத் தொழிலாளர் புதிய சம்பள ஒப்பந்தம் பேச்சு முறிவு.

© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, புதிய தமிழகம் கட்சி