கட்சியில் இணைக
1.கடந்த 50 ஆண்டுகளாக அடித்தன தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள், வன்முறைகள் புதிய தமிழகத்தின் போர்க்குணமான போராட்டங்களால் வெகுவாக குறைந்துள்ளன. தமிழகம் முழுவதும் வன்கொடுமைகளுக்கு எதிராக உடனடியாக எதிர்வினையாற்றும் தன்னம்பிக்கை உணர்வைத் அடித்தள தமிழ் மக்களின் அனைத்து பிரிவினருக்கும் புதிய தமிழகம் ஏற்படுத்தியுள்ளது.

2.மூர்க்கப் போக்கிரித்தனமான வன்முறைக்கு இலக்கான தென்தமிழகத் அடித்தன தமிழ் மக்கள் திராவிட இயக்கங்கள், பொதுவுடமை இயக்கங்கள் இன்னபிற அரசியல் அமைப்புக்களின் அரவணைப்புக்கு ஏங்கினர். வாக்குவங்கி அரசியலை மையமாகக் கொண்டு செயல்படும் தலைவர்கள் காயம்பட்ட மக்களுக்கு காகிதங்களில் கண்ணீர் அறிக்கை தந்தனர்; கையறுநிலை பாடல்கள் எழுதினர். வேறுவழியில்லாத அடித்தன தமிழ் மக்கள் 1982 ஆம் ஆண்டு மீனாட்சிபுரத்தில் மதம் மாறினர். தொடர்ச்சியாக இராமநாதபுரம், போடி, புளியம்பட்டி என வன்கொடுமைக்காக நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மதம் மாறத் தலைப்பட்டனர். மதமாற்றம் என்பது விரும்பி நிகழ வேண்டியது. அது போராடத் துணிவற்றவர்களின் பாதுகாப்பிடமாக இருக்கக்கூடாது. சாதிய வன்முறைகளுக்கு சரியான பதிலடி எதிரியின் போர் உத்திகளையே நாமும் கையாள வேண்டும் என்ற தலைவரின் வழிகாட்டுதலால் தென் தமிழகத்தில் ‘தாக்கினால் திருப்பித் தாக்குவோம்’ புதிய உத்தி பின்பற்றப்பட்டது. மதமாற்ற முழக்கங்கள் மறைந்து போயின.

3.கோவை மாவட்டம் சின்னாம்பதியில் மலைவாழ் மகளிர் மீது அதிரடிப்படையினர் பாலியல் வன்முறை - அம்மக்களின் துயரங்களை முதன்முதலில் வெளிக்கொணருதல் - உண்ணாவிரதம்

4.உழைக்கும் மருதநில மக்களாகிய தேவேந்திர குல வேளாளரின் சமூகப் பண்பாட்டு அடையாளங்கள் தமிழக சமுதாய அரசியல் தளத்தில் மேலாண்மையான பண்பாட்டு அடையாளங்களாக உறுதி செய்யப்பட்டுள்ளன. தேவேந்திர குல சமுதாயத்தில் பிறந்த விடுதலை வீரன் சுந்தரலிங்கம் பெயரில் மாவட்டம் அமைக்கவும், இம்மானுவேலர் பெயரில் மாவட்டம் அமைக்கவும் முதல் கோரிக்கை வைத்தது தலைவரின் தலைமையிலான கூட்டமைப்பே - இதேபோல சுந்தரலிங்கம் நினைவிடம் இம்மானுவேலர் நினைவிடம் ஆகிய இடங்களில் கூட்டமைப்பின் சார்பில் விழாக்களை மிகப் பிரமாண்ட முறையில் முதன்முதலில் நடத்தியது தலைவர் தலைமையிலான கூட்டமைப்பே. தலைவரின் தொடர்போராட்டங்கள் காரணமாகவே அ.இ.அ.தி.மு.க அரசு வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகத்தை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை பிறகு வந்த தி.மு.க அரசு சட்டமன்றத்திற்கு உள்ளும் மக்கள் மன்றத்திலும் தலைவரின் இடைவிடாத போரட்டத்தின் காரணமாக வேண்டா வெறுப்பாக நடைமுறைப்படுத்தியது. (இப்பெயர் நீக்கம் இன்னொரு வரலாறு). சுந்தரலிங்கம் போக்குவரத்துக்கு கழகம் பெயர் மாற்றம் அனைத்து தலைவர்களின் பெயர்கள் நீக்கம் - சுந்தரலிங்கம் பெயரை வைக்க எதிர்த்தவர்களின் எதிர்ப்புக்கு பயந்து பெயர் நீக்கத்தால் ஏற்பட்ட தென்தமிழக தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் கோபத்தைத் தணிக்க கவனகிரியில் வீரன் சுந்தரலிங்கம் நினைவிடம் அரசு சார்பில் விழா, நினைவு கிராமம், சென்னையில் அம்பேத்கா; மணிமண்டபம் ஆகியவற்றை தி.மு.க அரசு உருவாக்கியது. இதேபோன்று சக ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்களும் மீட்டெடுக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்டியல் சாதி பிரிவின் 76 உட்சாதிகளின் உரிமைகளுக்கு புதிய தமிழகம் போராடி வருகிறது.

5.விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு 1955 தோட்டத் தொழில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் தமிழகத் மலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வாழ்ந்த நிலையை மாற்ற புதிய தமிழகம் போராடியது. மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்காக தொடர்ந்து போராடியது. மாஞ்சோலை, வால்பாறை பகுதிகளில் நடைபயணம், வேலைநிறுத்தங்கள், இந்திய மனிதஉரிமை ஆணையம், உலக தொழிலாளர் அமைப்பு ஆகிய மனிதஉரிமை அமைப்புகளிடம் தொடர் கோரிக்கைகளை வைத்து அவர்களின் ஊதிய உயர்வுக்கு முதற்கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறோம் - 53 ரூபாயாக இருந்த தினசரி ஊதியம் 130 ரூபாயாக இன்று உயர்ந்துள்ளது. 1995 ஆம் ஆண்டு நாள் ஊதியம் 150-ஐ கோரியது புதிய தமிழகம் - மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கே மலைத்தோட்டங்கள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தையும் தொடர்ந்து நடத்தி வருகிறது.

6.ஜுலை 07, 1998 தேவக்கோட்டை அருகில் உள்ள கண்டதேவி கோவிலில் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக நீதிமன்றத் தடை பெறப்பட்டது - அனைத்து சாதியினரும் தேர்வடம் பிடித்து இழுக்கும் உரிமை நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்டது.

7.சமுதாய நீதிக்காக - ஜுலை 1998 முதல் நம் போராட்டத்தின் விளைவாகத் தமிழ்நாடு அரசு வௌ;ளை அறிக்கை தந்திருக்கிறது. நமது உரிமைகளோடு மிகப் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் ஆகியோரின் வேலை வாய்ப்புக்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

8.‘‘புதிய தமிழகம்’’ அரசியல் இயக்கத்தின் செயல்பாடுகள் இந்திய மாநில அளவிலும் அனைத்து நாடுகள் அளவிலும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

9.புலம்பெயர்ந்த தமிழர்கள் ‘‘புதிய தமிழகம்’’ போராட்டங்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

10.1999-2000 ‘‘புதிய தமிழக’’த்தின் சமுதாய நீதிக்கான போராட்டம் காரணமாக அரசு கலைக் கல்லூரிகளின் 595 விடுபட்ட பணியிடங்களில் 100 பணியிடங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு 72 பேர் தேர்வு - அரசு பொறியியல் கல்லூரிகளிலும் விடுபட்ட பணியிடங்களை நிரப்ப அரசு விளம்பரம் வெளியிட்டுள்ளது. புதிய தமிழகத்தின் தொடர் போராட்டம் காரணமாக 2008 ஆம் ஆண்டு புதியதாக பதவி ஏற்ற தி.மு.க.அரசு 67 அரசுக் கல்லூரிகளில் விடுபட்ட பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் செய்தது. இதற்கு மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் புதிய தமிழகம் குரல் கொடுத்தது. நீதி மன்றத்தில் புதிய தமிழகத்தின் போராட்டம் காரணமாக பணியிடங்களை நிரப்ப அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. எனினும் இந்த பிரச்சனையைப் புதிய தமிழகம் கேட்கக் கூடாது என்பது போன்ற அறிவுறுத்தலை நீதிமன்றம் வழங்கியது. இத்தீர்ப்பின் அடிப்படையிலேயே சென்னை புனித பாண்டியன், இளங்கோவன் மறுவழக்குத் தொடர்ந்தனர். ஏற்கெனவே வழங்கிய தீர்;ப்பை நீதிமன்றம் மறுபடியும் வழங்கியது. புதிய விளம்பரம் 512 வெளியிடப்பட்டது. இதன் விளைவாக 512 உதவிப் பேராசிரியர்கள் பணி வாய்ப்பைப் பெற்றனர். 1998 ஆம் ஆண்டு 100 பேரும், 2008 ஆம் ஆண்டு 512 பேரும் ஆக 612 உதவிப் பேராசிரியர்கள் எமது போராட்டத்தின் விளைவாக பணிவாய்ப்பைப் பெற்றனர். இது இந்திய / தமிழக கல்வி வரலாற்றில் வேறு எந்த இயக்கமும் நிகழ்த்தாத மாபெரும் சாதனையாகும்.

11.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பின்னடைவு பணியிடங்களைக் கோரி அங்குள்ள ஆசிரிய அமைப்புகளுடன் இணைந்து போராட்டத்தை புதிய தமிழகம் 1995 ஆம் ஆண்டு தொடங்கியது. தொடர்;ந்து சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடி வந்தது. சட்டமன்றத்தில் தலைவாரின் கோரிக்கையை அன்றைய தமிழ் வளர்ச்சி அமைச்சர் முனைவர்.மு.தமிழ்குடிமகன் ஏற்றுக் கொண்டார் - தொடர் போராட்டம் நடைபெற்றது - புதிய தமிழகத்தில் சார்பாளர் முனைவர். அருணா ஆட்சிகுழு உறுப்பினராக பதவி ஏற்றார். ஆட்சிக் குழுவில் தொடர்ந்து வற்புறுத்துதல் - ஆசிரியர் - ஊழியர் அமைப்பின் போராட்டத் தலைவர்கள் பணிநீக்கம் - பணிநீக்கத்திற்கு அருணா தலைமையில் போராட்டம் - துணைவேந்தர் தேர்வுக் குழுவில் அருணா பொறுப்பு - புதிய துணைவேந்தராக முனைவர் சி.சுப்பிரமணியம் நியமனம் - பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மறுபடியும் சேர்ப்பு - 25 உதவிபேராசிரியர்கள் பணியிடம் நிரப்பல் - 95 ஆம் ஆண்டு புதிய தமிழகம் தொடங்கிய போராட்டம் வெற்றி.

12.பிற பல்கலைக்கழகங்கள் இடஒதுக்கீடு தொடர்பான முடிவுகளுக்கு ‘புதிய தமிழகம்’ முனைப்புகள் உதவின. துணைவேந்தர் நியமனத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை - பாரதிதாசன் துணைவேந்தராக தேவேந்திரகுல வேளாளரான பேராசிரியர். முனைவர் ஜகதீசன் நியமனம் - பேராசிரியர் மாரியப்பன் துணை வேந்தராக நியமனம் - தொடர்ந்து பிற பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டிற்காக கோரிக்கை.

13.2002, மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினராக முனைவர் அருணா பதவி ஏற்பு - பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை - துணைவேந்தர் முனைவர் சிவசுப்ரமணியம் பதிவாளர் முனைவர் சி.சுப்பிரமணியம் ஒப்புதல் - 25 குறைவிட பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

14.இலங்கைத் தமிழர் பாதுகாப்பு - தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தாக்கப்படுதல் - கச்சத்தீவு ஒப்பந்தம் மறுபரிசீலனை குறித்து ஆர்ப்பாட்டங்கள் - கண்டனக் கூட்டங்கள் - அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் - பிற அமைப்பினர் நடத்திய போராட்டங்களில் புதிய தமிழகம் கலந்து கொண்டது - 18/5 முள்ளிவாய்க்கால் மனித படுகொலைக்குப் பிறகு உலகத் தமிழர்களின் வாழ்வுரிமை காப்பு பணி குறித்தும்/ உலகத்தின் பல்வேறு பகுதிகள் - இந்தியாவில் பிற மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை புதிய தமிழகம் கூட்டியது. இதன் தொடர்ச்சியாக அனைத்துலக அனைத்திந்திய தமிழர்களின் பாதுகாப்புக்காகவும், குடியுரிமைக்காகவும் ‘உலகத்தமிழர் பாதுகாப்பு மையம்’ உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, புதிய தமிழகம் கட்சி